பக்கம்:வீர காவியம்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189

போர்ப் படலம்


சிறுவீரன் பெருவீரங் காட்டிக் காட்டிச் செயிர்த்தெழுந்து புரிகின்ற கோல மெல்லாம் உறுபோரிற் கண்ணுரக் காணல் வேண்டும்; உள்ள மெலாங் களிகொண்டு பொங்க வேண்டும்; கறுவோடு பொருதவன்தன் ஆண்மை எல்லாம் காட்டியபின் நான்வெல்லும் ஆசை யாலே மறுபேரால் பொரநினைந்தேன்; மாற்ருன் வீரம் மதிக்கின்ற பெருங்குணமும் வேண்டும் அன்ருே? 476 எனுமொழிக்கு மதலைக்கோன் தலைய சைத்தே இசைவளித்தான்; மறுத்துரைப்பின் புலந்து மீண்டும் சினமெடுத்துச் சென்ருலும் செல்வ னென்றே செய்வதொன்றும் அறியாமல் எழுந்து சென்ருன்; திணவெடுத்த திண்டோளர் தருக்கி நின்று செயும்போரை எதிர்நின்று காண்பான் போல முனமடுத்த இருளென்னுந் திரையை நீக்கி முகங்காட்டிச் செங்கதிரோன் எழுந்து வந்தான். 377 செயிர்த்து - கோபித்து. கறு - கோபம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/192&oldid=911354" இலிருந்து மீள்விக்கப்பட்டது