பக்கம்:வீர காவியம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191

போர்ப் படலம்


கொடியுயர்த்தி ஆங்குளதே பச்சை வண்ணக் கொட்டிலங்கே வைகுபவன் யாவன்?' என்ன, 'அடிபிடித்துச் சீனத்தன் தந்து சென்ற அரியதொரு கூடாரம் ஆகும்; அங்குக் குடியிருக்கும் வீரன்பேர் நினைவி லில்லை; கொடுங்கூற்றம் அனையனவன்' என்று சொன்னன்; படிறுரைக்க முனைகின்ருன் இவனென் றையம் படருவதால் பைப்பயநாம் அறிவம் என்று, 380 'பசுமையுடன் பளபளக்கும் பாடி வீடு பணிவரிய மாவேழற் குரிய தன்ருே? அசதியுனக் கழகாமோ? மொழிக’ என்ன, ஆமாம்அப் பாசறையும் இதுவே போலப் பசியதுதான்' எனமழுப்பி நின்ரு னங்கே; பதுங்குகின்ருன் உண்மைசொல எனவு ணர்ந்தோன், 'உசவுமெனக் குண்மைநிலை யுரைத்து, வீரன் உறைவிடமுங் காட்டுதியேல் நன்ரும்' என்ருன். 381 “யானுமவன் பாடியைத் தான் தேடு கின்றேன் யாண்டுமது தோன்றவிலை; தன்ன கர்க்குப் போன அவன் இன்னுமிவண் வந்தா னல்லன் போலுமெனக் கருதுகின்றேன்; வேழன் நெஞ்சில் ஆனதுனி தண வாத கார ணத்தால் அவ்வுழை நின் றகலாமல் இருத்தல் கூடும்; கோனவனே டடுத்தடுத்துப் பிணங்கி நின்று குழப்புவது வழக்கம்'எனக் கூறி நின்ருன். 38.2 பொய். அசதி - மறதி உசவும் - வினவும் துனி - பகை. , T-5 - நீங்காத உழை - இடம் கோன் - அரசன்ווהזדדי י

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/194&oldid=911358" இலிருந்து மீள்விக்கப்பட்டது