பக்கம்:வீர காவியம்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

202


இயல் 95 புகு போர் தனில் கொலேவாள் கொடு பொருதார் பகை மிகவே. வாள்சுழற்றும் வித்தகமும், பின்னும் முன்னும் மாறிவந்தே ஒருவருடன் ஒருவர் மோதித் தாள்பெயர்த்துச் சுழன்றுவரும் விரைவும், கட்கம் தாக்கிஎழும் தீப்பொறியும், கேட யத்தால் வாள் தடுத்துத் திரிகின்ற விறலும், கையை வாய்வைத்து வியந்தங்கே கண்டு நின்ருர்; கோள்வளர்க்கும் பொருசமரில் வெற்றி தோல்வி கொள்பவரார்? எனவறிய வல்லா ரில்லை! 402 வளர்ந்துவரும் பகைக்களத்தில் வலிமை கொண்டு மற்றவர்க்குத் தந்திறமை காட்டும் வீரர் தளர்ந்தறியா வாளிரண்டுஞ் சுழற்றி வீசித் தாக்குவதால் வாய்மழுங்கிப் பற்கள் கொண்டு விளைந்தபுலக் கருக்கரிவாள் போல மாறி விட்டதல்ை விட்டெறிந்து, வேல்கள் தாங்கிக் களந்தணிலக் கடுமறவர் ஏற்றங் கொண்டு கதக்களிறு பொருவதெனக் கலந்து நின்ருர். 403 கட்கம்-வாள் விறல்-திறமை. கோள்-கொலை. கதம்-கோபம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/205&oldid=911383" இலிருந்து மீள்விக்கப்பட்டது