பக்கம்:வீர காவியம்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

206


இயல் 98 விற்போர் முடித்து வீரர் இருவரும் மற்போர் விளைத்தனர்; மாலையில் களைத்தனர். சிற்றத்தால் ஆர்த்தெழுந்த வேழன் நீண்ட சிலையொன்றைக் கைக்கொண்டான்; சினந்தெ ழுந்த தோற்றத்தான் கோளரியும் வில்லெ டுத்தான்; சோவெனப்பெய் மாரியைப்போல் அம்பு பெய்தார்; ஆற்றத்தாம் எய்தவெலாம் முறிந்து வீழ, அடற்புரவி விட்டிறங்கித் தமது தோளின் ஏற்றத்தால் மற்போரைத் துவக்கி விட்டார்; இருபாலுங் குவிந்திருந்தோர் ஆர்ப்ப ரித்தார். 409 புலியேறு பொருவதெனப் பாய்ந்து தாவிப் போயிருவர் உடல்பற்றிப் பொருதுங் காலை வலியோடு பொருபவர் தாம் மேலுங் கீழும் வருவதும்பின் போவதுமாய்ப் புரண்டி ருந்தார்; மலைவாருள் இவன்மேலா அவன்தான் மேலா மதிப்பிட்டுச் சொலமுடியா நிலைய ரேனும் நிலையாக இவ்வமரில் இரண்டி லொன்று நிகழ்ந்துவிடும் என நினைந்தார் சூழ்ந்த வீரர். 410 சிலை-வில், மலை வார்-போர்செய்வோர் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/209&oldid=911391" இலிருந்து மீள்விக்கப்பட்டது