பக்கம்:வீர காவியம்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

210


இயல் 100 போர்த்திறங் கண்டோர் புகன்றனர் பலமொழி வேர்த்துளம் தளர்ந்து வேழன் நடந்தனன். மகலந்தமுறை நிகழ்ந்தமொழி அனைத்தும் அங்கே வளைந்திருந்து வியப்புடனே கண்டு கேட்டுக் கலைந்துசெலும் வீரரினம், இள வ லின்று காட்டிய நல் லாண்மையையும், வேழன் போரில் குலைந்ததையும் தனித்தனியே பேசிச் சென்ருர்; கொடுஞ்சமரில் நாளையிவர் கூடுங் காலை மிகலந்துகொளும் வாகையினை இளைஞன் தானே மேவுவது திண்ணமெனச் சொன்னர் ஓர்பால். 416 'திசையனைத்தும் வென்றியோன்றே கண்டு வந்த திறலனுக்கோ இந்த நிலை வந்த திந்த வசையினைத்தான் கேட்பதற்கோ இன்று வந்தேன்; வாடியவன் செல்கின்ருன் அந்தோ!' என்று மிசையனைத்தும் கண்டிருந்த கதிரோன் துன்பம் மிடைந்துவரும் நெஞ்சினகுய் மறைந்து சென்ருன்; குசைமடுத்த புரவிமீசை ஏறிச் செல்லான் குனிந்த தலை நிமிர்ந்திலய்ை நடந்தான் வேழன். 417 மிலைந்து-குடி . வாகை-வெற்றி மாலை. மிசை-மேலிருந்து. குசை-கடிவாளம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/213&oldid=911401" இலிருந்து மீள்விக்கப்பட்டது