பக்கம்:வீர காவியம்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவிடம் 216


இயல் 105 மற் போரில் மா வேழன் தோற்ரு ணுக மனமறிந்த பொய்சொல்லித் தப்பிச் சென்ருன். தோற்றத்தால் களிறனையோய்! இளகி நின்று தொழுதுன்னைக் கேட்டவெலாம் உண்மை;ஆனல் மாற்றித்தான் பொருளுணர்ந்தாய்! அஞ்சிச் சாகும் மரபன்றே என்மரபு வீர மூட்டும் சோற்றைத்தான் பாலைத்தான் எனக்குத் தந்தார்; சொற்றவனம் போர் தொடங்கும் வேளை, யிங்கு மாற்றத்தாற் பயனில்லை; எழுக வீர! மற்போரில் ஒருமுடிவு காண்போம்' என்ருன். 428 இருவருந்தம் புரவியினின் றிறங்கிப் பற்றி இருநிலத்தின் மிசையெங்கும் புரண்டு ருண்டு செருமிடைந்தார்; வியர்வைஎலாம் நிலத்தில் வீழச் செம்புழுதி உடலெங்குந் தோயக் கண்டோர் வெருவுறவே மேல்கீழாய் மலைந்தி ருந்தார்; மிகுபொழுது பொருதிருந்தும் முடிவே யில்லை; முறுவலனவ் வேழனிடைக் கச்சை பற்றி முழுவலியோ டி ழுத்தவனைச் சுழற்றித் தள்ள, 429 மாற்றம்-பேச்சு மலைந்து போர் செய்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/219&oldid=911412" இலிருந்து மீள்விக்கப்பட்டது