பக்கம்:வீர காவியம்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.1Q போர்ப் படலம்


இயல் 107 தோல்வியினுல் மனமுடைந்து வேழன் மீண்டான் தோற்றவன்றன் நிலைக்கிசங்கி மறைந்தான் வெய்யோன் நடித்துரைத்த பொய்ம்மொழியால் தப்பி வந்த நாடறிந்த மாவேழன் மனமு டைந்து, வடித்தெடுத்த படைக்கலங்கள் பெற்றி ருந்தும் வட்கார் முன் சிறுவனுக்குத் தோற்று விட்டேன் படித்தலத்தில் வாழ்வதினும் இறத்தல் மேலாம்; பாருலக வீரனெனப் பேர்பெற் றென்ன? வடிப்புடுத்த அவன்முகத்கைக் காணுங் காலை வலிமைஎ லாங் குறைந்துபடக் காண்கின் றேனே! 434 சாய்ந்துபடும் கதிரவனே! இந்நாள் மட்டும் சமர்முனையில் என்றேனும் சாய்ந்த துண்டோ? காய்ந்திடினும் சாய்ந்திடினும் யாரும் நின்னைக் கடிவதிலை வணங்குகின் ருர்; சிறும கற்குச் சாய்ந்தவெனை யார்புகழ்வர்? இகழ்வ ரன்ருே? தாங்ககிலேன் இவ்வீழ்ச்சி எனநி னைந்து பாய்ந்துவரும் புனல்மூழ்கித் தனது மெய்யிற் படிந்ததுகள் கழுவியபின் பாடி புக்கான். 435 வட்கார்-பகைவர். வடிப்புடுத்த-அழகு பொருந்திய துகள்-து. சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/222&oldid=911420" இலிருந்து மீள்விக்கப்பட்டது