பக்கம்:வீர காவியம்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

222


இளங்காளை முகங்கண்டு முன்போல் நெஞ்சம் இளகாமல் மும்மடங்கு வலிமை கொண்டு, 'களங்காண வந்தோய்நின் இளமை தன்னுல் கடுகளவும் அஞ்சாது, நிலைமை யொன்றும் விளங்காது முழங்குகிருய்! கிழவன் என்று விளம்புகிருய்! உனையழிக்கும் கிழவன் நானே; துளங்காதே! இன்றுனது வலியும் வாழ்வும் தொலைப்பதற்கே வந்துள்ளேன் வாவா என்ருன் 439 முன்னையிரு நாளையினும் காணுப் போரின் முறையெல்லாம் மொய்ம்புகொடு பொருது நின்ருர்; தன்னையொரு சிறுமகனே வெல்வ தென்று தாங்ககிலா ஆற்றலொடு மலைந்தான் வேழன்; பன்னரிய நெஞ்சுரத்துப் பாலன் இன்று பழையவனை விடுவதிலை என்று டன்ருன்; கன்னமொடு கைசேர்த்துக் கண்வி Nத்துக் கலக்கமுடன் சூழ்மறவர் கண்டு நின்ருர். 440 பெருமறவன் சிறுமகனை மார்பில் தாக்கிப் பிறழ்ந்துவிழச் செய்துவிட்டான்; எழுந்த காளை உறுவலியால் அவனிருதோள் பற்றிக் கொண்டான்; உந்தி எழும் மாவீரன் உதறித் துக்கி மறுமுறையும் எறிந்துவிட்டான்; மீண்டும் நின்ற மனவலியன் இருதோளும் ஒச்சி வந்தான்; உறழ்புலிபோல் பாய்ந்தோடி அவனைப் பற்ற உருண்டுருண்டு பொருதிருந்தார் சிங்கம் அன்னர் 441 ப்ரைய்வன-முதியிகிைய வேழனை. ஒச்சி - ஓங்கி உறழ்-பகைகொண்ட,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/225&oldid=911426" இலிருந்து மீள்விக்கப்பட்டது