பக்கம்:வீர காவியம்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223

போர்ப் படலம்


இயல் 109 தந்தைபெயர் கேட்டவுடன் மலைத்து நின்ற தனிமகனை மாவேழன் தாக்கி விட்டான். இருவரும்பின் தனியெழுந்து கூர்ந்து நோக்கி இருமருங்கும் கையுயர்த்திச் சுற்றிச் சுற்றி வருபொழுது மாவீரன் சீற்றம் பொங்கி வழக்கம்போல் "மாவேழா' என்று கூவப் பொருவமரில் தந்தைபெயர் கேட்ட காளை பூரித்து மலைத் தங்கு நின்று விட்டான்; பெருங்களிறன் வலிகொண்டு பாய்ந்து தள்ளிப் பிள்ளையிளம் மார்பகத்தே ஏறி நின்ருன். 4:42 நொடிப்பொழுதும் தாழ்த்தவிலை உடைவாள் கொண்டு நுடங்கரிய மருமத்தே பாய்ச்சி விட்டான்; வெடிப்புடைய இளங்காளை அவனை நேற்று வீழ்த்தியபோழ் தவனுரைத்த விதிம றந்தான்; கடுப்புடைய மாவேழன் மைந்தன் என்று காணுமல் உறவுமுறை அறுத்தெ றிந்தான்; துடிப்புடையன் மார்பிலது பாய்ந்த தாலே சோர்ந்துதரை வீழ்ந்துபல கதறு கின்ருன். 443 மருமம் மா பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/226&oldid=911429" இலிருந்து மீள்விக்கப்பட்டது