பக்கம்:வீர காவியம்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229

போர்ப் படலம்


இயல் 1 13 துடித்தே புலம்பித் தொடுவாள் கொண்டுயிர் மடித்திட முனைந்தனன் மாழ்.குறும் வேழன். 'நின்னனைதான் கருவுற்றுத் திகழும் ஞான்றே நிகர்வரிய வீரமகன் பிறப்பன் என்றேன்; சொன்னவனம் அரியேற்றைப் பெற்றெ டுத்தாள்; சூரனென உரையாது பொய்ம்மை கூறி, அன்னையவள் செய்பிழையால் உனையி ழந்தாள்; அறிவிலனுய்ப் புனைந்துரைத்த பொய்யால் நானும் உன்னையிழந் துறு துயரங் கொண்டேன்; அந்தோ! ஒருபொய்க்கு விளைபயன்தான் இத்து னைத்தோ! 452 பெருவலியில் என நிகர்வாய் எனுங்க ருத்தில் பெற்றஎனக் கெதிராவாய் எனப்ப கர்ந்தேன்; பொருவமரில் எதிரானுய் அந்தோ! இந்தப் போர்க்களத்து மண்ணுக்கே கொணர்வேன் என்றேன்; உறுமொழியின் படியுன்னைக் கொண்டு வந்தே ஊர்மண்ணிற் கிடத்திவிட்டேன்; களத்து மண்ணே மறவனுக்கு வாழ்வென்றேன்; சொன் ன வண்ணம் வாழ்வதுவும் மண்ணுணுய்! அந்தோ! அந்தோ! 453 1 ஆம் பாடலொடு 185 189 ஆம் பாடல்களை ஒப்பு நோக்குக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/232&oldid=911445" இலிருந்து மீள்விக்கப்பட்டது