பக்கம்:வீர காவியம்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

236


பெற்றவள்பால் நில்லாமல் இங்கேன் வந்தாய்? பேதைமனங் கொண்டவனே! பகைக்கு லத்தைச் செற்றஎன்வாள் கறைபடியச் செய்வ தற்கோ? தீராத பழி.எனக்குத் தருவ தற்கோ? உற்றவண் நீ உறைந்தனையேல் வாழ்ந்தி ருப்பை: ஒருநாளில் என்றேனும் உன்னைக் காண்பல்; பெற்றவளும் உண்மையினை மறைத்தாள்; அந்தோ! பெரும்ப கைபோல் எனக்கவளும் ஆகி விட்டாள். 466 ஒரு முறைதான் உன் முகத்தைக் கண்டேன்; ஆனல் உறுதுயரைத் தாங்ககிலேன் அரற்று கின்றேன்; கருவறையில் ஈரைந்து திங்கள் தாங்கிக் கடுந்துயரால் உயிர்த்தெடுத்துப் பாலும் ஊட்டிச் சிறுதுயிலும் கொள்ளாமல் பேணிக் காத்துச் செய்யமுகங் கண்டுளத்துக் களித்த தாய்தான் மறு கவரும் இக்கொடுமை எப்ப டித்தான் மங்கையவள் ஆற்றுவளோ? ஐயோ பாவம்! 467 உண்டுடுத்து விளையாடிக் களைத்த யர்ந்தே ஊசல்தனில் கண் வளர்தல் காணுப் பாவி மண் தொடுத்த வெறும்புலத்தில் களைத்துச் சாய்ந்து வளர்துயிலிற் கிடக்கின்ருய் கண்டு நின்றேன்; கண்டெடுத்த நன்மணியைத் தோற்று விட்டேன்; கன்றதனைப் பிரிந்தலறும் ஆவி னைப்போல் வண்டுடுத்த குழலாளை வாடச் செய்தேன்; மடந்தையவள் படுத்துயரம் எற்ருே? எற்ருே? 468

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/239&oldid=911457" இலிருந்து மீள்விக்கப்பட்டது