பக்கம்:வீர காவியம்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237

போர்ப் படலம்


வீரத்தின் விளைநிலமே! கருணை கொள்ளும் விறல்மகனே! கற்பகமே! செல்வக் கோவே! தீரத்தின் வைப்பகமே! குணத்தின் குன்றே! தெய்வமணிக் குலக்கொழுந்தே ஆண்மை என்னும் பேருக்கு வடிவளித்த உருவே! கண்ணே! பெறற்கரிய மாமணியே! எனப்பி ரிந்த பாரத்தைச் சுமந்தினி நான் வாழ்தல் நன்ருே? பளுவதனுல் பயனென்ன?’ என்ற ரற்றி, 469 அணிந்திருந்த வீரவுடை படைக்க லங்கள் அத்தனையும் எரியிட்டுத் தீய்த்தொ ழித்தான்; தணிந்திருந்த பாசறையைப் பிடித்து வீழ்த்தித் தலைப்பறந்த கொடியெடுத்துக் கிழித்தெ றிந்தான்; அணிந்தொளிர்ந்த இருக்கைதனைச் சுக்கு நூரு அடித்தொடித்தான்; வீரத்தின் சின்ன மெல்லாம் திணிந்திருந்த கவசத்தை பின்னம் செய்தான் திகில்கொண்டோன் அமர்க்களமே ஆக்கி விட்டான். தினவடங்கு மாவேழன், பெற்ற மைந்தன் திருமுகத்தை மறுமுறையும் கூர்ந்து நோக்க, மனமடங்கிச் சினமடங்கி ஆற்றல் சான்ற மறமடங்கிச் செயலடங்கிப் பொருது வெல்லும் நினைவடங்கி உடலடங்கிச் சுழன்று பாயும் நிலையடங்கிக் கொலையடங்கி நாட்டை யாளும் கனவடங்கிச் சினமடங்கல் மதிமு கந்தான் கலைமலிந்து மும்மடங்கு பொலியக் கண்டான். 471


மடங்கல் - சிங்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/240&oldid=911461" இலிருந்து மீள்விக்கப்பட்டது