பக்கம்:வீர காவியம்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

காட்சிப் படலம்

‘ஏறுபரி ஒன்றிலனாய்ச் சூழ்ந்து செல்லும்
      ஏவலருங் காவலரும் இல்லா னாகி
வீறுபெறும் மாவீரன் தனிமை எய்தி,
      வீதிவழி தளர்நடையான் வருகின் றா’னென்
றூறுபடப் பேசுவரே! மாற்றார் என்னை
      உருக்குலைந்த தோற்றத்திற் காண நேரின்
வேறுபட எள்ளிநகை செய்வ ரே!நான்
      வீணருக்குப் பழிப்பொருளா ஆனேன் அந்தோ! 25

எளியர்சிலர் பொருதிவனை வீழ்த்தி வீட்டே
      இவன்பரிமா தனைக்கவர்ந்தார் போலும் என்றும்
துளியளவும் பிரியகிலாப் புரவி காக்குந்
      துணிவிலன்நம் அரசெதிர்க்க வலனோ என்றும்
இளிவரலுக் கிவனொருவன் என்றுங் கூறி
      ஏளனங்கள் புரிகுவரே! எனவ ருந்தி
ஒளிகுறையும் முகமுடையான் பரிமா தேடி
      ஒன்னலர் தம் நாட்டகத்துப் புகுந்து சென்றான். 26


ஒன்னலர் - பகைவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/26&oldid=911479" இலிருந்து மீள்விக்கப்பட்டது