பக்கம்:வீர காவியம்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீரகாவியம்

24

இயல் 8

வயந்தநகர் புகுந்துவரும் மாவே ழற்கு
வரவுரைத்தே எதிர்கொண்டான் வயந்த நாட்டான்.

தனக்குவமை எவருமிலான் தறுக ணாளன்;
      தணப்பரிய வெகுளியினான் தனிய னாகி,
மனக்கவலை மீதூர ஊர்தி யின்றி,
      மாவேழன் வயந்தநகர் புகுந்த செய்தி,
தனைத்தொழுது மன்னன்பால் ஒற்றர் கூறத்
      தார்வேந்தன் வயத்தரசன் விரைந்தெ ழுந்து
சினக்களிற்றின் வலியுடைய வேழன் றன்னைச்
      சென்றெதிர்கொள்மனத்தினனாய் நடந்தான் ஆங்கே 27

படைமறவர் புடைசூழச் சென்ற வேந்தன்;
      பாரடங்கப் போர்தொடங்கி வென்ற வீரன்
நடைதளர்ந்து துணையிழந்து வருதல் கண்டு
      நல்வரவு பலவுரைப்போன், ‘வீரர் வீர!
தொடைபுணர்ந்த மலர்மாலை நினக்குச் சூட்டித்
      தொழுகின்றேன், எதிர்பாரா வரவு கண்டு
மடைதிறந்த வெள்ளமென இன்பம் பாய
      மனங்களித்தேன்’ எனமுகமன் உரைத்து நின்றான்.28


தணப்பு அரிய - நீங்காத, முகமன் - புகழ்மொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/27&oldid=911481" இலிருந்து மீள்விக்கப்பட்டது