பக்கம்:வீர காவியம்.pdf/43

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வீரகாவியம் 40


நெருநலிர விடைவந்து தன்னுள் ளத்தில் நிலைத்துவிட்ட பெண்ணனங்கென் றெண்ணிச் சென்று மறுகுமவன் ஏமாற்றம் உற்ரு னேனும் மங்கையவள் எழிலெல்லாம் வடித்துக் காட்டும் திருவுருவப் படமதனில் வைத்த கண்ணைத் திருப்பாமல் இமைக்காமல் விழித்து நோக்கி இருவிழியும் கனியிதழும் நிலவை வென்ற எழில்முகமும் சுருள்குழலும் வியந்து நின்ருன். 61 'பணிவிழிகள் நாணத்தின் குழைவு காட்டிப் பருகுமெனப் பாடுறுத்தித் துயரில் வாட்டும்; கனியிதழ்கள் பவளத்தின் செம்மை காட்டிக் காணுகின்ற என்னுளத்தில் வெம்மை கூட்டும்; நனிபொழியும் எழில்முகத்தை, முறுவல் பூக்கும் நளினத்தை, விழிக்கடையைச் சாயல் தன்னை வனையுமவன் பரிசில்பெற வாைந்தா னல்லன்; வாட்டிஎனைத் துயர்ப்படுத்த வனைந்தான்' என்ருன். 62 நெருநல்-நேற்று. நளினம்-இங்கிதம், வனையுமவன்-ஒவியள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/43&oldid=1525885" இலிருந்து மீள்விக்கப்பட்டது