பக்கம்:வீர காவியம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 காட்சிப் படலம்


இயல் 18 இவ்வுருவத் தெழிலாள்யார் என்ருன் வேழன் இளவரசி காணென்ருள் வந்த தோழி. ஒவியத்தில் உயிர்வைத்த உரவோன் தன் முன் ஒருதெரிவை வந்தங்கு வணங்கி நின்ருள்; 'காவியத்தின் தலைவிஎனத் தோற்றம் நல்கிக் கண்கவரிவ் வோவத்தாள் யாவள்' என்ருன்; 'நீவியக்க நிற்குமிவள் எங்கள் மன்னன் நேயமகள், நானவட்குத் தோழி, இந்தக் கோவிலுக்குள் கோதையிவள் அழகுத் தெய்வம், குலமகளாம் இவளனையார் யாண்டும் இல்லை!" 63 என்றமொழி செவிப்படலும் நெஞ்சின் மீறி எக்களித்து வருங்களிப்பால் அவளை நோக்கி, 'இன்றுனது கன்னல்மொழி கேட்டு நெஞ்சம் எல்லையின்றிப் பூரிக்கக் காணு கின்றேன்; நின்றனுடை இளவரசி எழிலுக் கெங்கும் நிகரிலையோ? ஆரணங்கோ? அடவோ விந்தை! மன்றலினுங் கொண்டிலளோ? பருவம் யாதோ? மாதவட்குப் பெயர்யாதோ? மொழிவாய் தோழி. 64 == கன்னல் - கரும்பு. மன்றல் - திருமணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/44&oldid=911519" இலிருந்து மீள்விக்கப்பட்டது