பக்கம்:வீர காவியம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம் 44


" உன் மொழியின் உட்பொருளை உணரும் ஆற்றல் உடையனலேன், தெள்ளிதின் நீ விளங்கக் கூறின் என் மனமும் தெளிந்திடரின் நீங்கும் என்ருன்; ஏங்குமவன் உள்ளத்தைப் புரிந்த தோழி, 'மின்ைெளிரும் நெடுவேலோய்! எங்கள் செல்வி மிக்காரும் ஒப்பாரும் இல்லா னுக்குத் தன்மனத்தைத் தந்தமையால் அவனை யன்றித் தார் சூட மணம் புரிய இசைந்தா ளல்லள். 69 வீரத்தின் உறைவிடமாய் விளங்கும் வீரன் வியன் புகழைப் போர்த்திறனை அழகை யெல்லாம் சேரத் தன் இரு செவியால் நாளும் கேட்டுச் சிந்தைக்குள் அவனை ஒரு தெய்வம் ஆக்கி, நேரத்தை எதிர்நோக்கி நிற்கின் ருள் தன் நிகரில்லா இளமைஎழில் படைப்ப தற்கே: நேரிற்கண் டறியாதா ள் அவனை நேற்று நீள்விழியாற் கண்டுமனங் குளிர்ந்து நின் ருள். 70 காண்போமோ காணுேமோ என்று நாளும் கலங்கிமனங் குமைந்துடலம் மெலிந்து வந்த நாண்பாவை நெருநலவன் திருவோ லக்கம் நண்ணுங்கால் கண்குளிர உளம்பூ ரிக்கச் சேண்மேவு கன்னியர் தம் மாடம் நின்று சேல் விழியால் அவனெழிலைப் பருகி நின்றிவ் வாண் போல யாருைளார் என வி யந்தே 7 1 அவளை மறந் தியம்பினள் காண்’ என்ருள் தோழி. _ -- சேண்- உயரத்தில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/47&oldid=911525" இலிருந்து மீள்விக்கப்பட்டது