பக்கம்:வீர காவியம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம் 48


இயல் 21 காதலியைக் காண்பதற்கு விழைந்தான் வேழன் கரையருகே வாவென்று பணித்தாள் தோழி. 'எனைவிழைந்தாள் இளவரசி என்ற செய்தி இதுகாறும் உரையாமல் ஏனே தாழ்த் தாய்? நினைவிழந்து துயரடைந்து வாடச் செய்தாய்! நீமொழிந்த மறைமொழியால் சோர்வே தந்தாய்! உனையிரந்து வேண்டுவல்மற் ருென்று தோழி! உளங்கவர்ந்த எழில்மகளைத் தனித்துக் கான முனையுமெனக் குதவுதல்நின் கடனே யாகும்; முப்பொழுதும் எப்பொழுதும் மறவேன்' என்ருன். 79 'துடிக்கின்ற பெருவீர! என்னை யிங்குத் தூதனுப்பித் தன்கருத்தை நின்பாற் கூறிக் கிடைக்கின்ற நல்விடையைக கொணர்க என்று கிள்ளைமொழி இளவரசி விடுப்ப வந்தேன்; பிடிக்கடங்கு துடியிடை யாள் நினைவா லிங்குப் பேதுற்றுத் தவித்தனை நீ; அதனுற் சொல்லி முடித்துவிட மனமின்றி மனத்தின் ஆழம் முழுதுணர உரையாடி நின்றேன் ஐய! 80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/51&oldid=911537" இலிருந்து மீள்விக்கப்பட்டது