பக்கம்:வீர காவியம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம் 60


"ஏன்சிரித்தாய் எழிற்சிலையே என்னை நோக்கி' என வினவும் வீரனுக்கு நின்ற பாவை தேன்வடித்த மொழியொன்றும் புகன்ரு ளல்லள்; திருந்தடியால் ஈரடிகள் பெயர்ந்து சென்ருள்; "நான் விடுத்த சொல்லுக்கு விடையே யில்லை நங்கையனைச் சிலையென்று விளித்த தாலோ? மான் கொடுத்த மருட்பார்வை பெற்ற வட்கு மனமிலையோ மொழியிலேயோ வாய்ம லர்த்த? 106 என்றுரைத்துப் பின் தொடர்வோன் அவள் செங் கையில் இலங்குமலர்த் தாமரையை நோக்கு வான் போல் ஒன்றிநிற்கும் அவ்விரண்டு மொட்டும் வேண்டி உனையிரப்பன் மகிழ்ந்தளிக்க வல்லாய் கொல்லோ' என்றவற்கு மொட்டிரண்டும் ஈய வந்தாள்: 'ஈத ன்றே என்னுளத்து வேட்கை என்னுள் நின்றிருக்கும் மலரேனும் தருவாய்' என்ருன்; நேரிழையாள் மலரொன்று கொடுக்க வந்தாள். 107 சேயிழையுன் கைம்மலரை விழைந்தே னல்லேன் செங்கயல்கள் பிறழ்மலரே வேண்டு கின்றேன்; ஈயிதனை இல்லை.எனின் செம்மை தோயும் இதழிரண்டு தந்தாலும் போதும்' என்ருன்; வேயிணையும் தோளியிதழ் கொய்தா ளாக விடுவிடுஅவ் விதழ்தன்னைக் கொய்ய வேண்டா சேயிதழில் வழிதேனே வேண்டும் மென்ருன்: சிற்றிடையாள் மொழிக்குறிப்பைப் புரிந்து கொண்டாள் த \ 0. வேய்-மூங்கில் சேயிதழ்-சிவந்த இதழ் 107, 108-இருபாடல்களும் காகம் குறிப்பை நயம்பட உரைக்கின்றன,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/63&oldid=911562" இலிருந்து மீள்விக்கப்பட்டது