பக்கம்:வீர காவியம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 திருமணப் படலம்


இளமைஒரு நிலையுடைய பருவ மன்றே: இருநிலத்தில் அப்பருவம் உயர்ந்த தொன்ரும்: வளமையினை நுகர்ந்தின்பம் துய்த்த லின்றி வறிதொழிய விட்டுவிடல் இயல்பும் அன்று: களமர்வயல் பருவத்தே பயிர்செய் யாரேல் கண்காணப் பயனென்றும் தருவ தில்லை; களகளவென் ருழியினுள் மழைபொ ழிந்தால், கானகத்து நிலவெறிந்தால் எவர்க்கு நன்மை? 127 கொற்றவன்முன் பற்பலவும் விதந்து தோழி கூர்மதியால் உரைத்தவெலாம் கேட்டி ருந்தோன் 'கற்றறியும் சான்ருேர்தம் அறிவா னுய்ந்து கழறுதல்போல் ஏதேதோ மொழிந்து நின்ருய்; உற்றவுன துளம்புகல மறந்தாய் போலும் உண்மைசொலத் தயங்குவதேன்? நோக்க மென்ன? சுற்றிவளைத் துரைப்பதினி வேண்டா என்பால் துணிந்ததனை மொழிந்திடு நீ அஞ்சேல் என்ருன் 128 'அருள் பொழியும் விழியுடையாய்! பருவம் வந்த அரிவையர்தம் வாழ்வுக்குத் துணையைத் தேடி மருளுறுவ தியல்பன்ருே மங்கை யர்க்கு மணநாளே திருநாளாம்; அந்நன் ைைளத் தருவதுநின் கடனுகும். அதனை வேண்டித் தண்குடையோய் நின்னிடம்யான் வந்தேன்' என்ருள்; சுருள்குழலி! நீவிழையும் ஒருவ னுக்கே துணையா வாய்' என மகிழ்ந்து சொன்னன் மன்னன். 129 களமர்-உழவர். எறிந்தால் - வீசில்ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/74&oldid=911585" இலிருந்து மீள்விக்கப்பட்டது