பக்கம்:வீர காவியம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம் 74


'நாட்டினுக்கோர் அரசனலன்; நாடாள் வோர்க்கு நற்றுனையாம் அமைச்சு மலன்; அவரை யெல்லாம் ஆட்டிவைக்கும் பெருவலியன் அழகன் வீரன் அன்னவற்கே தன் மனத்தைப் பறிகொ டுத்தாள்: சூட்டுதற்கு மனமாலை அவனை யன்றித் தொல்லுலகில் எவருமிலர்' என்ருள்; மன்னன் வாட்டமொடு, நங்குலத்து மரபை மீறி வழக்கமிலாச் செயல்புரிய நினைந்தாள் கொல்லோ ? 134 இவளழகில் மனமயங்கித் தவங்கி டக்கும் இளவரசர் பலரிருந்தும் மதியா ளாகி, எவளுெருவன் தனை நினைந்தோ மறுகு கின் ருள்? இகழ்ச்சிசொலும் பான்மைக்கோ இடங்கொ டுத்தாள்? தவறுசெயும் துணிவிவட் கு வந்த தேயோ? தன்னிளமைப் பருவத்தால் விளைந்த தேயோ? எவருடைய தூண்டுதலால் இதனைச் செய்ய ஏந்திழையிங் கொருப்பட்டாள்?' எனக்க னன் ருன்.135 மீண்டுமவன் விழிசிவந்து, மன்ன ருக்குள் மீக்கூர்ந்த புகழுடையான் ஒருவற் றேர்ந்து பூண்டருதோள் புணர்மாலை சூடச் செய்வேன்; போபோ அவ் விளையாட்கும் இதனைக் கூ'றென் ருண்டுமுறை செயுமன்னன் ஆணை யிட்டான்; அப்பனெனும் முறைமறந்தான்; தோழி அஞ்சி, ஆண்டகை நின் சொல்லுக்கோர் அட்டி யுண்டோ? ஆயினுமென் பணிந்துரைக்குச் செவியீ. கென்ருள். 6 s % மீக்கூர்ந்த-மேம்பட்ட பூண் தருதோள்-அணிகலன்களையுடைய தோள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/77&oldid=911591" இலிருந்து மீள்விக்கப்பட்டது