பக்கம்:வீர காவியம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 மகப்பெறு படலம்


இயல் 4.2 மயங்கினள் ஒருநாள் மாது வாடினன் வேழன்அப் போது. மாடத்து நிலவரங்கில் ஒருநாள், காதல் மணிப்புறவாய் அவ்விருவர் மகிழும் போது கூடத்துச் சென்றவள் வாய் குமட்டி நின்ருள்; கொடுவேலான் பதைத்தோடித் தோள்கள் பற்றிப் பீடத்தின் பஞ்சணையின் சேக்கை சேர்த்தான்; பேதையதன் மிசைமயங்கிக் கொடிபோற் சாய்ந்தாள்; வாடத் தன் காதலிக்கு வந்த தென்கொல்? வாய்குமட்டி நின்றதென்கொல்? எனத் துடித்தான் . 178 மெல்லியகால் சுரந்துசிறி ததைத்தி ருக்க , மேனியெலாம் பசந்ததுபோல் தளர்ந்தி ருக்க, வல்லியவள் முகஞ்சிறிது செம்மை மாறி வாட்டமுடன் விளர்த்திருக்கக் கண்டான்; போரிற் கொல்லியலின் திறங்கண்டும் இளகா நெஞ்சன் கோதையிவள் நிலைகண்டே இளகி விட்டான்; வல்லினமும் மெல்லினத்தைக் கூடுங் காலை வலிகுறைந்து மென்மைபெறல் உண்மை யன்ருே! 179

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/98&oldid=911640" இலிருந்து மீள்விக்கப்பட்டது