பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 11 களை வீரர்களாக்கவல்ல பெருவீரர்களின் கதையின் கலை வடிவமே இந்த வீர சுதந்திரம் என்னும் நாடகம். இதில் ஆங்காங்கு வரும் சில இணைப்புக் கற்பனைப் பாத்திரங் களைத் தவிர, மற்றவை யாவும் உண்மைப் டாத்திரங்கள். உயிர்கொடுத்த தெய்வங்கள். சரித்திரத்தின் சான்று கள். வரலாற்றின் வலிமைகள்! இந்திய விடுதலை மாளி கையின் அஸ்திவாரங்கள் இந்த அஸ்திவாரத்தின் வலிமையை அறிந்தால்தான் இன்று கட்டிக் குடியிருக்கும், சுதந்திர மாமணி மாளிகை யின் அருமை பெருமைகள் நமக்குத் தெரியும். இன்று ஜனதிபதியின் மாளிகையில், புதுடெல்லியின் பார்லி மென்ட் கட்டிடங்களில், இருநூறு ஏக்கர் நிலத்தில் அமைந்த மொகல்கந்தவனத்தில, கோடானு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பேரணி மாட கூடங்களில்: ஆயிரமாயிரம் சிப்பாய்கள் ஆலவட்டம் போட, பாரதத் தின் ஜனதிபதி பவனி வருகிருர் அந்த மாளிகையில் ஆயிரமாயிரம் சிகப்பு ரோஜா மலர்கள் மலர்கின்றன மணம் வீசுகின்றன என்ருல், அந்த மணத்தில்:ஜனதிபதி மனமகிழ்ந்திருக்கிருர் என்ருல், அந்தச் செம் மலர்களின் மகரந்த மணத்தில், செங்கோட்டையின்கொடியில், நம் தேசீயத் திருப்பூர் குமரனின் இரத்தம் துடிக்கிறது. தூக்குமேடையில் பகத்சிங் கக்கிய புரட்சி இரத்தம் கனல்கிறது. நேதாஜியின் துடி துடித்த இதய ரத்தம், ஜனதிபதி மாளிகை தோட்டத்தைச் செம்மையாக்கியுள்ளது! அன்னை சொரூப ராணியின் தலையி லிருந்து கொட்டிய இரத்தம், வீரர் சிதம்பரம் கல்லுடைத்த கரங்களின் இரத்தம்; லஜபதிராயின் வீர நெஞ்சம் வடித்த குருதி, தில்லையாடி வள்ளியம்மையின் உயிர்; பாபு கணுவின் இள மண்டை வெடித்துச் சிதறிய கபாலக் குருதி மற்றும் பெயர் தெரியாத லட்சோயலட்சம் இளஞ்சிங்கங்கள், வீரச் செம்மல் களின் இதயமடை திறந்து கொட்டிய தியாகக் குருதி யின் உரத்தினுல் பயிரானவைதான் ஜனதிபதி மாளிகை