பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 விர சுதந்திரம் பகத்சிங் : உஸ். யாரும் அழக்கூடாது. அழுகை அவருக்குப் பிடிக்காது பெண்களைப்போல் அழுது, அந்த மாவீரரது தியாகத்தை மாசு படுத்தாதீர்கள் இப்பேற்பட்ட வீரமரணம் யாருக்குக் கிடைக்கும்! இந்தத் தள்ளாத வயதில் தனது தாய் காட்டின் விடுதலைக்காக, த ம து திருமார்பில் அடிகளைத் தாங்கியவண்ணம் உயிர் நீத்த வீரத்தளபதி அவர் கடைசியாக என்ன சொன்னுர்? என் மார்பில் அடித்த ஒவ்வொரு அடியும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியச் சவப் பெட்டியில் அடிக்கப்படும் ஆணிகளாகும். அந்த ஏகாதிபத்திய சவப்பெட்டிக்குரிய ஆணிகளை அறை யும் வலிமையை நமது இளங்கரங்கள் பெற வேண்டும். அரசினைப் புதைககும் துணிச்சல் நமது கெஞ்சிலே பெருக வேண்டும். இதை மறந்துவிட்டு ஏனய்யா அழுகிறீர்கள்? சரி அழ வேண்டாம். நமது தலைவரைக் கொன்ற அந்த வெள்ளைப் போலிஸ் அதிகாரிக்கு உரிய பாடத்தைக் கற்பித்தே. ஆக் வேண்டும். இன்று என்ன தேதி: இருபத்தாறு. சரி, அடுத்த மாதம் இருபத்தாறு வரும்போது-அந்த சாண்டர்ஸ் இந்த மண்ணில் இருக்கக் கூடாது. இருக்க முடியாது. இருக்க விடமாட்டோம். இது சத்தியம். இன்குலாப், ஜிந்தாபாத் புரட்சி வாழ்க! (என்று கூறி-மெதுவாக கம்பீரமாக நடந்து, தனது தொப்பியைக் கழற்றி, மண்டியிட்டு வணங்கி லஜபதியின் திருவடியைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்கிருன்) காட்சி முடிவு