பக்கம்:வெங்கலச் சிலை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

17


வெளியே சொல்ல வெட்கம், ஏழைக்கு வெளியே சொல்ல பயம். ஆக இரு குழந்தைகளின் பெற்றோர்களால் இச்செய்தி மறைக்கப்பட்டாலும், குழந்தைகளுக்கு அவர்கள் கொடுக்கும் எச்சரிக்கை, அன்று முதல் அவைகள் உள்ளத்தில் ஏதோ ஒரு விதமான ஏற்றத் தாழ்வான எண்ணமும், பொறாமையும் குடி கொள்ளுகிறது. நாள் வளர வளர அப்பொறாமை செடியாய், மரமாய் பல கிளைகளைக் கொண்ட பெருமரமாய், பூத்துக் காய்த்துக் கனிந்து குலுங்கி அதன் விதைகள் மக்கள் சமுதாயம் பரவிய உலக மூலை முடுக்குகளிலெல்லாம் வித்தூன்றி விடுகிறது. இனி அதை அடியோடு ஒழிக்கும் வழி உண்டென்றால், பொறாமைக்கு வித்தூன்றும் பருவமாகிய குழந்தைப் பருவத்தைக் கண்காணிக்க அரசியலார் பொறுப் பேற்றுக் கொள்ள வேண்டும். தாய் தந்தையர்களிடையே குழந்தைகள் வளருவதால் மற்றோர் கேடும் சூழ்கிறது. குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டுமே என்பதற்காகப் பெற்றோர்கள் தங்கள் நியாயமான வசதியைக் குறைத்துக் கொள்ளுகின்றனர். அதன் மூலம் அவர்கள் ஆயுளும் குறைகிறது. அதனாற்றான் அறிஞர் பிளாட்டோ அவர்கள், குழந்தைகளை வளர்ப்பதில் அரசாங்கம் கவலை யெடுத்துக்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கின்றார்கள்.

மரணம் ஒன்று நிச்சயம் உண்டென்ற நிலையை எல்லாரும் எப்போதும் நினைவில் வைத்திருந்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/17&oldid=1315745" இலிருந்து மீள்விக்கப்பட்டது