பக்கம்:வெங்கலச் சிலை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

9


கமும் சிலபல நேரங்களில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் கேடயமாகவும் அமைந்தது.

பாராளும் மன்னர்க்குப் பணிந்து நடப்பதே, பரமன் இட்ட கட்டளை, என்று நம்பியிருந்த அன்றைய ருஷ்யக் குடியானவர்களுக்கு இந்த புரட்சி வீரனின் செய்கைகள் ஒரு புதிராகவே இருந்தது. சிறுகச்சிறுக ஏதோ ஒரு புதுமைக்குரல் நாட்டின் நாலா பக்கங்களிலும் கேட்க ஆரம்பித்தது. அதன் உண்மையைக் கண்டு கொள்ளவே மக்களுக்குப் பல நாட்கள் பிடித்தன.

கறப்பு நிலத்தை உழுது பயிர்செய்ய உழவன் படாதபாடு படுவதைப் போல, மண்வெட்டியம் கையுமாய்த் திரிந்த மானிட நிலத்தை உழுது பயிர் செய்தான். அது அப்போது அங்கு அவ்வளவு எளிதில் முடியும் காரியயல்ல. ஏனெனில், பரம்பரை பரம்பரையாக ஆண்ட ஜார். குடும்பத்தினர் ஆட்சியை ஆட்டிப் பார்ப்பதென்பது அவ்வளவு லேசான காரியமுமல்ல. நெருப்பில் நீந்துவதைப் போன்ற மரணப் பரீட்சையாகும். பாம்போடு விளையாடும் பயங்கரச் செய்கைக் கொப்பாகும். மலையை அசைப்பதும், மண்டலத்தைத் தாண்டுவதும், நட்சத்திரங்களை எண்ணுவதும், சந்திரனை நிலத்துக்கிழுப்பதும், பிறந்தது முதல் இறக்கும்வரை விட்ட மூச்சைக் கணக்கெடுப்பதும் எப்படி முடியாத காரியமோ, அதே போன்றது தான் ஜார் குடும்பத்தினரைப் போர்க்கழைப்பது என்றிருந்தனர் மக்கள். அது அன்றிருந்த மக்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/9&oldid=1315734" இலிருந்து மீள்விக்கப்பட்டது