பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 உயர்ந்தான். அந்தப் பதவியை வகித்ததற்கு அவன் அசாதாரணமானவனாகவும், சிங்கள மொழியில் திறமை யுள்ளவனாகவும் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் போர்ச்சுகீசியர்களை ராஜாசிங்கன் வெறுத்தான். அழ கிய டாஸ்கன், தன் பணியின் மூலம் அரசனுடைய நன்றி யறிதலைப்பெற்று மந்திரியானான் என்றும், அரண்மனை யில் அவன் வரவேற்கப்பட்டு ராணியின் காதலன் ஆனான் என்றும் கதை கூறுகிறது. ராணி நோயில் படுத்தாள். வைத்தியர்கள், ஜோஸ் யர்களின் ஆலோசனையின் பேரில் பலி (பேய் நடனம்) நடத்த முடிவு செய்தார்கள். அதற்காகக் களிமண்ணில் ராணியின் உருவச்சிலை தயாரிக்கப்பட்டது. அந்தச் சிலையைக் கண்ட டாஸ்கன், முழுப் பயன் கிடைக்க வேண்டுமானால் சிலையின் ஒவ்வொரு அங்கமும் உண்மையான பிரதியாக இருக்கவேண்டும் என்றும். ராணியின் தொடையில் உள்ள மச்சம் சிலையில் காணப் படவில்லை என்றும் சொன்னான். அவனுடைய இழி வான சொற்களை அரசர் கேட்டதும், டாஸ்கனைச் சிரச்சேதம் செய்யும்படி கட்டளையிட்டார். தண்டனை நிறைவேற்றுவதற்காகக் காத்திருக்கும் சமயம் அவனுக் காக ராணி துக்கப்பட்டாள். அதற்கு ஒரு பாட்டில் டாஸ்கன் பதிலளித்ததாவது, நிறைவேறாத காதலுக்காகப் பழைய ராவணன் பத்துத் தலைகளைக் கொடுத்திருக்க அமுதம் போன்ற உன் முத்தங்களைப் பெற்ற நான் உனக்காக ஒரு தலையை ஏன் கொடுக்கக் கூடாது? கொலைக்களத்திற்கு, ராணியின் சாளரத்தின் வழி யாக அவன் அழைத்துச் செல்லப்பட்டபோது இந்தக் கவிதையை அவன் கூறியதாகக் கருதப்படுகிறது. ஆ! நாம் சந்தித்ததும், என் இதழ்த் தேனை நீங்கள் பருகியதும் இந்தச் சாளரத்தில் அல்லவா! என் காதலரே!