பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனலை (கி.மு. 47-42)

அனலை-இவளே இலங்கையின் முதலரசி. உயிர்வதை -யாகிய துர்ச் செய்கையால் இவளரசு பங்கமடைந்தது. இப்பதிவிரதா சீலி பாலாத்திசிவன், வடுகன், தரக்கட்டு தீசன், நீலியன் என்னும் பார்ப்பான் முதலிய முப்பத் திருவரை வாழ்க்கைத் துணையாகக்கொண்டு5 வருடமும் ஈற்றில் தனித்து 4 மாதமும் அரசு செய்து வந்தாள். இவளுடைய மானங் குலைந்த துர் நடையைக் குறித்து மகாகுலன் மகன் மகாலந்தீசன் இவளைக் கடிந்து கொண்டமையால் அவனுயிரைப் பறிக்கவும் முயன்றாள். அவன் இவளுக்கஞ்சி ஒளிந்தோடி, புத்தகுரு வேடம் பூண்டு சின்னாளின் பின் தன் வேடத்தை விட்டுப் பெருஞ்

சேனையோடு வந்து யுத்தமாடி இராசதானியைக் கைப் & வெ-1