பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 11 குழந்தைக்குப் பத்திரை எனப் பெயரிட்டுப் பெற்றோர் சீராட்டிப் பாராட்டிவளர்த்தார்கள். இவ்வாறு வளர்ந்த அப்பெண்மகவு பெரியதாகி மணம் செய்யத்தக்க வயதினை யடைந்தது. ஒரு நாள், இப்பெண் தன் மாளி கையின் மேற்புறத்தில் உலாவியபோது தெரு வழியே கட்டழகு மிக்க காளை ஒருவனை அரசனது சேவகர் கொலைக்களத்துக்கு அழைத்துக் கொண்டு போவதைக் கண்டாள். கண்டதும் அக்காளையின் மேற் காதல் கொண்டாள். அவன் அரசனது புரோகிதன் மகன். வழிப்பறி செய்த குற்றத்திற்காகக் கொலைக் களத்திற்கு அழைத்தேகப்பட்டான். இக் குற்றவாளியின் மேல் காதல் கொண்ட பத்திரை அவனையே மணம் புரிவேன். அன்றேல் உயிர்விடுவேன் என்று பிடிவாதஞ் செய்தாள். இதனை யறிந்த இவள் தந்தை கொலையாளருக்குக் கூலி கொடுத்து அவனை மீட்டுக் கொண்டு வந்து நீராட்டி ஆடையணிகளை அணிவித்துப் பத்திரையை அவனுக்கு மணஞ்செய்வித்தனன். '.

ைநூல் : பெளத்தமும் தமிழும் நூலாசிரியர்:

மயிலை சீனி வேங்கடசாமி. காசியபன் காசியபன்- பாம்பு மந்திரம் வல்ல ஒரு பிராமணன். இவன் பரீகதித்து மகாராஜன் விஷத்தினாலிறப் பானென்ப துணர்ந்து அவனிடஞ் சென்றபோது வழி யிலே தகூடிகன் கண்டு வேண்டிய திரவிய்ங்களைக் கொடுத்து அவனை அங்குச் செல்லாமல் தடுத்தான். நூல் : அபிதான கோசம் (1902) பக்கம்-71.