பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 முடிச்சை அவிழ்த்துப் பார்த்துத் தான் வெகு நாளாக அடைய ஆவல் கொண்ட வைரம் இதுவே எனக் கண்டு, பிறவிக் குருடன் திடீரெனக் கண்பார்வை யடைந்தால் எவ்வளவு களிப்படைவானோ அவ்வளவு களிப்பெய் தினான். உடனே அவன் எழுந்து ஷாவுக்கு வந்தனம் செய்யாமலும் அவனிடம் விடைபெற்றுக் கொள்ளா மலும் திடீரெனத் தன் அரண்மனை சென்றான்; அதோடு நில்லாமல் மற்றும் அவர்களிடம் ஏதோ விலையுயர்ந்த நகைகள் இருப்பதாகக் கேள்விப்பட்டுத் தன் சேவகர் களை விட்டுப் பெண்கள் ஆண்கள் எல்லோரையும் சோதனை போட்டு வீட்டையும் தேடி இருந்தவை எல்லாவற்றையும் தன்னிடம் சேர்ப்பித்துக் கொண் டான. 0 நூல் : இந்திய பூபதிகள் கதை (1930) பக்கம் - 70, 71, 2, 73. நூலாசிரியர் : T. W. கணேசன், B. A., L. T., (சென்னை பச்சையப்பன் கல்லூரிப் பள்ளிக்கூடச் சரித்திர ஆசிரியர்) ராணி திஷ்யரட்சிதை வயது முதிர்ந்த அசோகர் ஓயாவுழைப்பால் உடல், நலங்குன்றிஒவாப்பிணியுற்று அமளி பொருந்தியிருந்தார். எல்லா மருத்துவ நிபுணர்களும் நோயின் காரணம் அறி யாது கலக்க முற்றனர். அரசர் தம் இறுதிப்போது சேய் மையிலில்லை என்று ஏக்க முற்றவராய் அமைச்சர்களை, யும், அரண்மனை யதிகாரிகளையும் மருங்கழைத்து "இளமையும் வனப்பும் வளமையும் வலிதும் வாழ்நாளும் நின்றனவல்ல’’ என்று ஆசிரியர் இயம்பியவற்றை இன்று தெளிவாக உணருகிறேன். ஒரு கால், இப்பிணியி னின்று மீளினும் அரசை நீத்து எஞ்சிய நாட்களைக்