பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 44 குடாரமத்தில் கழித்து விடலாம் என்று கருதுகிறேன். ஆதலின் இத்தகுதி வாய்ந்த விடத்திற்குத் தக்கவன் முறைமையில் என்னை நிகற்றக் குணாலன் ஒருவனே அவனை...' என்று தம் உள்ளக் கிடக்கையை மெல்ல வெளியிட்டு மேலும் பேச வலியற்று அயர்ந்தார். இவ் வுரைகளைச் செவியுற்ற குணாலனின் சிறிய தாய் திஷ்ய ரஷிதை அவன் அரசனாவதைச் சகியாதவளாகி மனம் துடித்தாள். பழத்தை யதனுள்ளிருக்கும் புழுக்கள் அரிப் பது போன்று இவள் உடன் பிறந்த பொறாமைத் தீ இவள் உடலை வெதுப்பி, கனியிருப்ப வேப்பங்காய் கவரும் காகம் போலும், நீரிருப்ப சேற்றை நாடும் நத்தம் போலும், இயல்பாகவே கீழ்மையான கலகத்தை நாடு மாறு தூண்டியது. அடுத்து வாழும் இன்னுயிர்களை அழல் உமிழ்ந்து அழிக்கும் எரிமலை யொத்த இவள் உள்ளத்தினின்று முன்னொரு காலத்தும் பொறாமைத் தீ பொங்கித் தளும்பியது. * புத்த பகவான் ஞானவொளி பெற்ற போதிக் கண்டையில் விளங்கும் தூபியினிடத்தே அசோகருக்குத் திடமான பக்தியுண்டானது. அன்புப் பெருக்கால் கிடைக்கும் விலையேறப் பெற்ற ஒளிர் மணிகளை அதற்கு வரையாது கொடையளித்து வந்தார். இதை யறிந்த திஷ்யரஷிதை மனம் பொறாது வெகுண்டு தன் தோழி மாதங்கியின் உதவியால் போதியைக் காய்ந்து உலர்ந்து போமாறு சூவ்ச்சி செய்தாள் தெய்வத்தரு காய்ந்து படுவதைப் பார்த்த அரசர் ஆவி சோர்ந்து உணவு ஏற்காமல் உயிரிழக்கவும் உறுதி பூண்டார். தன் சூழ்ச்சி அவர் உயிருக்கே கேட்டை விளைக்கும் என்று அஞ்சிய திஷ்யை முது மரத்திற்குப்பால் வார்த்து மீண்டும் செழிப்புற வளரச் செய்தனள். இவள் அழுக்காற்றின் பயன் அரசரை போதிக்குப்பால் பெய்தற்பொருட்டு