பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 ஆதியில் அச்சிட்ட இரண்டு புத்தகங்களில் இல்லாத கட்டுக் கதைகள் மூன்றாவது நான்காவது அச்சிட் ட புத்தகங்களில் எவ்வகையில் வெளிவந்த தென்பீர்களேல், இத்திருக்குறளுக்கு நிகரான நீதி நூல் தமிழ் பாஷையில் ஏதொன்று மில்லாததாலும் வேஷப் பிராமணர்களை யறியாமலே தமிழ்ச் சங்கத்தினின்று குறள் வெளிவந்து விட்டதினாலும் உள்ள வேஷப் பிராமணர்கள் நிதானித்து ஆ! ஆ! நாம் வள்ளுவர்களை முதற் பறையர் களாகக் கூறிப் பலவகை இழிவு படுத்தி இராஜாங்கத் தாருக்கும் மற்றவர்களுக்கும் போதித்திருக்கின்றோமே, இந்நூலை அவர்கள் பார்வையிட்டு இத்தகைய விவேக மிகுந்தோர்களைப் பறையர்களென்றும் தாழ்ந்தோர் களென்றும் கூறிகின்றீர்களே அதன் காரணம்யாதென்று கேட்டார்களாயின் வேஷப் பிராமண விபச்சாரன் கதையால் மூடலாமென்றெண்ணி அடியிற் குறித்த கட்டுக் கதையை அடுக்கிவிட்டார்கள். அதாவது-நாயனார் புத்தபிரானைச் சிந்தித்துள்ள முதற்பாடலில், ஆதியொன்றும் பகவனென்றும் வந்துள்ள வாக்கியங்களை எடுத்துக்கொண்டு ஆதி யென்னும் பறைச்சியும் பகவனென்னும் பிராமணனும் இருந்ததாகவும், அவ்விருவர் விபசாரத்தால் ஏழு பிள்ளைகள் பிறந்த தென்றும், அவர்களில் நாயனார் மயிலாப்பூரில் தங்கி ஓர் வைசியகுலப் பெண்ணை மணந்து இல்லறம் நடத்துங்கால் இக்குறளைப் பாடினா ரென்றும் ஓர் சிறிய அகவற்பா பாடி, அதைப் பாடினவர் இன்னாரென்றும் குறிக்காமல் விசாகப்பெருமாளையர் 1835 இல் அச்சிட்ட குறள் புத்தகத்தின் கடைசியில் அச்சிட்டு வைத்துவிட்டார்கள். இவ்வகையாக நாயனார் சீவிய சரித்திரத்தை அவர் புத்தகத்தின் முதலில் அச்சிடாமல் கடைசியில் சேர்த்து