பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 69 விசாகப்பெருமாளையர் அகவலில் ஆறுபிள்ளைகள் பிறந்த இடங்களையும் தங்கிய இடங்களையும் காண்பிக் காமல் நாயனார் பிறந்த இடம் மட்டும் மயிலையென்று குறித்திருக்கின்றார். சரவணப் பெருமாளையர் அச்சிட்ட புத்தகத்தில் ஏழு பிள்ளைகளுக்கும் இடங்களைக் குறித்து விட்டது மன்றி ஊரிவில்லா வேதாளக் கதையொன்று விபரீத மாகச் சேர்த்து விட்டார். இவ்வகையாய் இருவர் எழுதியுள்ள பொய்க்கதை களுக்கு இன்னும் பெருத்த பொய்யாதரவுகளை 1847-இல் கிண்டுக்கல் முத்துவீரப்பிள்ளை உத்திரவின்படி வேதகிரி முதலியாரவர்கள் விரித்து விட்டார்கள். ஒ ஒரு பைசாத் தமிழன் (1908), (வார இதழ்)8-7-1908, இதழாசிரியர்: அயோத்தி தாஸ் பண்டிட். தொழுவூர் வேலாயுத முதலியார் - (1832 — 1889) சென்னையிலிருந்த வித்வான் தொழுவூர் - வேலாயுத முதலியார் கடின நடையில் நூறுபாட்டுச் சிலேடையாகப் பாடி, பழைய ஏட்டில் எழுதியிருந்ததாகச் சங்கச் செய்யு ளென்று வள்ளலாரிடம் கூழைக் கும்பிடு போட்டுக் காட் டவே, அதைக்கண்டு பிள்ளைப் பெருமான் 'இது பொரு ளிலக்கணந் தேறாக் கற்றுக் குட்டிப் பாட்டு: சங்கப்பாட் டல்ல; சங்கப் பாட்டாயிருந்தால் இவ்வளவு குற்ற மிராது' என்று கருணையினால் தொழுவூர் முதலி வெ-11 -