பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

e நூல் : அசோகர் சரித்திரம் ( 1915), பக்கம் - 47, 48, நூல் வெளியீடு: ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை,

ராணி ஜோஸ்பின்

நெப்போலியன் ஜோஸ்பினைப் பார்த்துப் பேசி 15 நாளில் மணந்தான். அதற்கு முன் அவள் ஒர் பிரபு வின் மனைவியாயிருந்தாள். முதல் கணவன் மூலம் இரண்டு குழந்தைகள் இருந்தன. ஜோஸ் பின் அழகில் மேம்பாடுடையவளாகக் கூற முடியாமற் போயினும். அவளுடைய அவயவ லட்சணங்களைக் கவனித்து நெப் போலியன் அவளை விரும்பி மணந்தான்.

ஜோஸ்பினை மணந்தபோது(8-3.1796) நெப்போலி யனுக்கு 26 வயது; ஜோஸ்பினுக்கு 32 வயது. ஜோஸபின் நெப்போலியனைப் பெரிதும் விரும்பினாள், நெப்போலி யன் இவளை ஒருநாளும் விட்டுப் பிரிய முடியாத நிலைமையையடைந்தான். ராணுவத்துடன் நெப்போலி யன் இத்தாலிக்குப் போக வேண்டியதாயிற்று. இத்தாலி சென்றதும் ஜோஸ்பினை உடனே வரும்படி எழுதினான்க வரவில்லை; பன்முறை கெஞ்சும் முறையில் எழுதினான். ஜோஸபின் பாரிஸ் நகரை விட்டு நகரவில்லை. கடைசி யாக பயமுறுத்தி எழுதியதின் பின்னர் இத்தாலி சென் றாள். காரணம் என்னவெனில், பாரிஸில் பல பிரபுக்கள் ஜோஸ்பினுக்கு அடிமையாயினர். பாரிஸை விட்டு இத்தாலி செல்லும் வழியிலிருந்த பல நகரங்களில் தங்கித் தங்கியே இத்தாலி சென்றாளாம். ஜோஸ்பினுடைய மின்சார வனப்பு பாரிஸ் நகரில் ஒரே பேச்சாயிற்று: இவள் எங்கு சென்றாலும் வண்டுகள் மொய்க்கும் தேன் கூண்டுபோல் ஆனாள்.

iராதி வீரனாகிய நெப்போலியன் மனைவி ஜோஸ் பின் பாரிஸை விட்டு இத்தாலி செல்லும் வழியில் உள்ள