பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 3 ஆலிஸ் பெரெர் ஸ் ஆரம்பத்தில் வெற்றிகளுடன் துலங்கிய மூன்றாம். எட்வர்டின் ஆட்சிக் காலம் கடைசி பதினைந்து ஆண்டு களில் பெருமை குன்றி. கழிந்தது. (1372-ல்) இரண்டு நாள் நீடித்த லா ரோஷெல் (LA ROCHELLE) கடற். போரில் இங்லிஷ் கடற்படை அழிந்தது. லா ரோஷெல் தோல் விக்குப் பிறகு இந்தக் கடலாட்சியை இங்லண்டு இழந்தது. 1375-ல் மற்றொரு சமாதானம் ஏற்பட்டது. இத் தோல்விகளின் மூல காரணம் இங்கிலிஷ் துரைத்தனத் தில் ஒற்றுமையின்மையாம். நிறைந்த ஆண்மையும் ஆற்றலும் பெற்றிருக்க வேண்டிய சமயத்தில் எட்வர். மன்னர் அறிவீனமாக நடந்து கொண்டார். ஆலிஸ். QLQvisio (ALICE PERRERS) என்னும் சுயநலமிக்க துஷ்டை யொருத்தியின் மோகவலையில் சிக்கி அவர் தமது அரச பொறுப்புக்களைக் கவனியாதிருந்தார். ப்ரான்ஸில் தம்வசத்திலிருந்து நழுவிக் கொண்டே போன நாடுகளை மீட்க அவர் யாதொரு முயற்சியும் செய்யா திருந்ததோடு துரைத்தனத்திலும் தம் பிடியை நெகிழ விட்டயர். 0 நூல் : பிரிட்டன் வரலாறு (1940) (இரண் டாம் பதிப்பு) பக்கம்-142, 143. மொழி பெயர்த்தவர் : ம. சண்முகசுந்தரம் எம். ஏ. எல். டி. (சென்னைப்பச்சையப்பன் கலாசாலைத் தலைமையாசிரியர்) இந்துார் மஹாராஜா துகோஜிராவ் ஹோல்கார் பட்டத்துறந்த இத்தார் மஹாராஜா துகோஜி ராவ் ஹோல்காருடைய முதல் கதை : . * , ஜே. டபிள்யூ. பிளேக் என்பவர் லண்டன் வீக்வி டெஸ்பாட்ச் பத்திரிகையில் இவ்வாறு எழுதியிருந்தார்.