பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 ராஜா உதயசிங் ஜாப்வா சமஸ்தானாதிபதி ராஜா உதயசிங் 1934-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மொத்தம் ஒன்பது கலியாணங்களைச் செய்திருந்தார். அந்த ஒன்பது பத்தினி மார்களின் பெயர்கள் வருமாறு : திமெகர் ராணி தரம்புரி ராணி கெரோட் ராணி ஷிமெபூர் ராணி (கெள ராணிஜி) தரியாவாட் ராணி சந்த்ரம்பூர் ராணி குரவாட் ராணி பராட் ராணி பல்லி ராணி இந்த ஒன்பது பத்தினிமாரும் போதவில்லை என்று பஸ்வான்கள் என்னும் பெண்கள் இருபத்தாறு பேரைக் கொண்டு வந்து வைத்திருந்தார். பஸ்வான்கள் என்றால் யார்? சமஸ்தானாதிபதியின் கலியான சம்பந்தமற்ற காதல் கிழத்திகள்! இவர்கள் மற்றவர்களின் மனைவி மாராயிருந்தாலும் இருக்கலாம். எனினும் இவர்களுக்கு விவாகரத்து அவசியம் இல்லையாம். சமஸ்தானாதி பதியின் காமக்கண்ணுக்குக் குறியானால் போதும், அவள் எப்பேர்ப்பட்ட பெண்மணியானாலும் அவருக்கு உட்பட்டே தீரவேண்டும்; இன்றேல் தன்னுயிரையும், தன்னைச் சேர்ந்தவர்களின் உயிர்களையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும், இந்த ஜாப்வா ராஜாவின் காமக் கிழத்திகளான பஸ்வான்களைப் பற்றிய விவரங் கள் வருமாறு : பஸ்வான் பெயர் புருஷன் இருந்தால் அவர்கள் பெயர் பகீரதிபாய் கிஷன் (ரட்லம்)