பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பூங்கோதை நீர்வளம், நிலவளம் பொலிந்து விளங்கும் மதுரை மாநகரில், இற்றைக்கு இரு நாற்றெழுபது வருடங்களுக்கு முன் பூங்கோதை யென்னுங் கணிகை ஒருத்தி இருந்தாள். இவள் கல்வியாலும் செல்வத்தாலும் அழகாலும் ஆடல் பாடல்களாலும் சிறந்தவள். இவள் செல்வம் முதலிய அனைத்தாலும் பல்லோரும் மதிக்கத்தக்க பக்குவமுடையவளாயிருந்தும், நீர்க்குமிழி போன்ற நிலையற்ற யெளவனத்தோடு கூடிய சரீரத்தை விற்று, வாழ்க்கையை விரும்பித் தேடும்பொருளில் நிறைவற்ற, நெஞ்சுடையளா யிருந்தாள். இங்கனம் இவளுள்ளத்திற் குடி கொண்டிருந்த பொருளைக் குறித்த பேராசையால், தன் குலாசாரத். திற்கு அடாததும், சகல பழி பாவங்கட்கு ஏதுவாயுள்ள தும், எவர்களாலும் அருவருக்கத் தக்கதுமான செயற். பாலவல்லாத இழிதொழில்களைச் செய்ய குலத்தார் அவமதித்து அவளை விலக்கினர். இங்ங்னம் குலத்தாரா லவமதிக்கப்பட்டு விலக்கப் பட்ட பின்னும் பொருள் மேற்கொண்ட பேரவா அடங் காது, அன்னிய சமயத்தானாகிய (சீதக்காதி) என்பா னோடு அவனுாராகிய காயற் பட்டணத்துக்குப்போய், அவனுடன் சுகித்திருந்து பெருநிதிதேடி, அவ்வளவிலும் பொருளவா நீங்காது, தான் சம்பாதித்த திரவியங். களனைத்தையுந் திரட்டிக்கொண்டு தன்னாடாகிய மதுரைக்குப் புறப்பட்டு வரும் வழியில். கள்வர் பலர்கூடி அப்பொருள்களோடு அணிந்திருந்த இரத்தினாபராதி ஆடை இறுதியாயுள்ள அனைத்தையும் கவர்ந்துகொண்டு தங்கள் மனக்கருத்தையும் நிறைவேற்றிச் சென்றனர். செல்லவே, பூங்கோதையாள் மனங்கலங்கி, ஐயையோ! நான் சாதி இழந்து, சனமிழந்து, சமையமிழந்து, சம்பா தித்த தனமிழந்து தங்கம்போலப் பங்கமிலாச் சரீரமு.