பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 மழிந்து தெருவில் நின்று கதியற்றவளானேனே என்று அலறி தலைமோதி மார்பிலறைந்து நிலத்தில் விழுந்து, தினங்கொடுக்குங் கொடையானே தென் காயற் பதியானே சீதக் காதி இனங்கொடுத்த உடைமையல்லத் தாய்கொடுத்த உடைமையல்ல எளியாளெந்தன் மனங்கொடுத்தும் இதழ்கொடுத்தும் அபிமானந் தனைக்கொடுத்தும் மருவி ரண்டு தனங்கொடுத்த உடைமையெல்லாம் கள்ளர்கையிற் பறிகொடுத்துத் தவிக்கின்றேனே என்று சொல்லி ஏக்கமுற்றிறந்தாள். 0 நூல் : உருத்திரகணிகையர் கதாசாரத் திரட்டு (1911), பக்கம்- 173, 174, 175. நூலாசிரியர் : க. அஞ்சுகம். பொன்னி பொன்னி-இவள் கம்பநாடரைத் தமக்கு அடிமை யாக்குகிறேன் என்று அரசனிடம் சபதஞ் செய்த தாசி. இவள் கம்பரிடம் "தாசி பொன்னிக்குக் கம்பனடிமை” யென எழுதிவாங்கி, அவர் அரசர் முன் அதற்கு வேறு பொருள் கூற ஏமாறியவள். e நூல் : அபிதான சிந்தாமணி (1910) பக்கம்-743, நூலாசிரியர் : ஆ. சிங்கார வேலு முதலியார், (சென்னைப் பச்சை யப்பன் கலாசாலைத் தமிழ் உபாத்தி யாயர்) . ஸ்ாலவதி ராஜக்கிருகத்தில் ஸாலவதி என்னும் ஒர் விலைமாது வசித்தாள். அவள் ஓர் இரவுக்கு நூறு தகபணம்’ வசூலிப்பவள். பருவம் தொடங்கியவுடனே அவளுக்குக்