பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 குழந்தை பிறந்தது. அவள் ஈவிரக்கம் இல்லாமல் அதைக் குப்பை மேட்டில் போடச் செய்தாள். அந்தச் சமயம் பிம்பிசாரனைப் பார்க்கப்போன அபயன். குளிரில் விறைத்துக்கொண்டு காக்கைகள் சூழக்கிடந்த அந்தப் பச்சிளங் குழந்தையைக் கண்டான்; எடுத்து வளர்த்தான். அந்தப் பாலகன், பின்னால் நாடு முழு வதும் புகழ்ந்த வைத்தியனானான். அவன்தான் ஜீவகன். e இதழ் : மஞ்சரி (ஜூலை-1953), கட்டுரை யாளர் : அட்ஸ் மில்லி. விமலா அம்பாபாலியின் காலத்திலேயே பின் பகுதியில் பிரசித்தி பெற்றவள் தாசி விமலா. இவள் ஏழைக் குடும் பத்தில் பிறந்தவளானாலும் செலவு செய்வதிலும், ஆடம் பர வாழ்க்கை நடத்துவதிலும்நிகரற்றவள். பலசாலிகள், மனத்தை அடக்கிய பிரம்மச்சாரிகள், உறுதியான நன் னடத்தை உள்ளவர்கள் ஆகிய எல்லாரையும் கெடுப் பதே இவளுடைய விரதம். அதனால் அரசர்களுக்காக வும். பெரிய அந்தஸ்து உள்ளவர்களுக்காகவும் தவங் கிடக்காமல் சாதாரண மனிதர்களையும் சற்றுப் பசை உள்ளவர்களையும் நாடுவாள்; தன் யெளவனம் முடியும் தறுவாயில் இவள் பெளத்த பிட்சு போக்காயனரை விரும் பினாள். அவரை வசப்படுத்த படாதபாடுபட்டபின், இவள் தானே ஒரு பிச்சுணி ஆகிவிட்டாள். 0 இதழ் : மஞ்சரி, (ஜூலை-1953) கட்டுரை யாளர் : அட்ஸ் மில்லி.