பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தமது மனைவியாகிய ஒலாஜா இராணியை ஒடுக்க வேண்டி போர்த்துகீஸாரின் உதவியைக் கோரினார். அக்கணவனது அறிவீனம் என்னே! அம்மாது வெங்கடப்ப நாய்க்கனின் உதவியைக் கோரினாள். இருதரத்தாரும் போர் புரிய முடிவில் பங்கெல் ராஜா முறியுண்டார். அவரது ராஜ்யத்தை வெங்கடப்ப நாய்க்கன் பிடுங்கிக் கொண்டான், ஆனால் இராணியாருடைய தேசத்திலும் சிலவற்றைப் பிடுங்கிக்கொண்டான். இ த னா ல் அவமானம் இராணியாருக்கு உண்டாயிற்று. 0 நூல்: நமது பரதகண்டம் (1926) பக்கம் 161. நூலாசிரியர்: வை. சூரியநாராயண சாஸ்திரி M. A. L. T. நெப்போலியன் மனைவி கெளண்டஸ் யுஜின் மகாமேதை நெப்போலியனின் மனைவி கெளண்டஸ் புஜின் எப்படிப் பட்டவள் தெரியுமா? படாடோபவாழ்க் கையில் பிரியம் மிகக் கொண்டவள். பேருக்கும் புகழுக்கும் பேராசைப் பட்டவள், ஆனால், நெப்போலி யனோ அதற்கு நேர்மாறானவன். எளிய வாழ்க்கை அவனது ஒரே லட்சியம். பேரும் புகழும் அவனுக்குச் சிறுபுழுவுக்குச் சமானம். எனினும் எடுத்த காரியத்தில் வெற்றி காண்பதையே குறியாகக் கொண்டவன். யுஜின் அவன் அலுவல்களில் எல்லாம் குறுக்கிட்டு அவற்றை அவன் நிறைவேற்ற முடியாதபடி பல விதத் திலும் தொந்தரவு கொடுத்துக்கொண்டே வந்தாள். எதற்கெடுத்தாலும் ஏட்டிக்குப் போட்டிதான்! ைஇதழ்-அன்னை, 1959.