பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 மராட்டிய முதல்வர் ராம்ராவ் ஆடிக் மராட்டிய மாநிலத் துணை முதல்-மந்திரியாக ராம் ராவ் ஆடிக் இருந்து வருகிறார். அவர் கடந்த வாரம் விமானம் மூலம் புறப்பட்டு மேற்கு ஜெர்மனி நாட்டுக்குப் போனார். விமானத்தில் பயணம் செய்யும்போது, அதில் இருந்த விமானப் பணிப் பெண்ணிடம் குடிபோதையில் ராம்ராவ் ஆடிக் முறை தவறி நடந்தார். இந்தச் சம்பவம் மராட்டிய மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெளிநாட்டில் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று (14-1-1984) ரோம் நகரில் இருந்து விமானம் மூலம் பம்பாய் திரும்பினார். விமான நிலையத்திற்கு ராம்ராவ் ஆடிக்கின் ஆதர வாளர்கள் திரளாக வந்து அவரை வரவேற்றனர். அதேபோல அவர் மீது தங்களுக்குள்ள வெறுப்பைக் காட்டுவதற்காக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களும், விமான நிலையத்துக்கு வந்தனர். ராமராவ் ஆடிக்குக்கு எதிராக அவர்கள் குரல் எழுப்பினார்கள். ஒரு பெண் கையில் செருப்பு மாலையுடன் ராமராவ் ஆடிக்கை வரவேற்க விமான நிலையம் வந்தார். விமானப் பணிப்பெண்ணிடம் தவறாக நடந்த ராம்ராவ் ஆடிக்குக்குப் போடுவதற்காக இந்தச் செருப்பு மாலை யைக் கொண்டு வந்ததாக அந்தப் பெண் கூறினார். 0 இதழ் : தினத்தந்தி, சென்னை 15-4-1984 அமெரிக்க உதவி ராணுவ அமைச்சர் ரோஸ்வெல் 39 வயதுப் பேரழகி ஜாக்குலின் அமெரிக்க ஜனாதி பதி (கென்னடியின் மனைவி) 68 வயது கிழவர் "அரிஸ்