பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 கல்யாணச் சேதி கேட்டு இப்படித்தான் வெட்கப்பட்டிருப் பாள்...! ஈஸ்வரா 1: என்று வேண்டாத நினைவுக்கு வெற்றிலைபாக்கு வைத்தாள் அவள். தன் மகனின் கல்யாணம் பற்றிய இன்பக் கனவில் திளைத்தவாறு அப்படியே நின்ருள். அப்போது. மல்லிகேஸ்வரர் கோயிலிலிருந்து மணி யோசை கிளம்பி வந்தது. நல்ல நிமித்தம்...! - "ஆண்டவனே :-அவள் கண்கள் நீர் சேர்த்தன. "நான் மாடிக்குப் போறேன், அம்மா..? 'நல்லது, தம்பி.” பிறை நிலவு தன் புகழைப் பறை சாற்றிக் கொண் டிருந்தது. கள்ளும் காரிகையும் மட்டும் போதைப் பொருள்களல்ல. புகழும் முன் சொன்ன இரண்டுடன் மூன்ருவதாக இடம் பெறும். புகழ் -இந்த மூன்றே மூன்று முத்துக்களுக்குள் சரித்திரம்ே அடங்கியுள்ளது; காலத்தின் கதைக்குக்கூட இதுவேதான் கல்லறை சமைத்துக் கொடுத்திருக்கிறது. இந்நிலையிலே, பிறை மாத்திரம் எங்ங்ணம் ஒதுங்கி நிற்க முடியும் : மாடியில் நின்று பார்த்தபோது, லிங்கச் செட்டித் தெருகூட எழில்பூத்துத் தோன்றியது. திக்கெட்டும் பர்ர்வையை வல்ை வீசினன். வானை அளைந்த ஆழி தென்பட்டது. கடற்கரையில் மின்சார வண்டியொன்று. அப்போதுதான் வந்து நின்றது. என்னவோ எண்ணி ளுன் , என்னவோ தோன்றியது. கண்ணில் தெரிந்த தோற்றத்தில் வருங்காலம் என்ற குறிப்பு காணப்பட்டது. அது அழகுடன் விளங்கியது. நிகழ்கால நினைவுகளுக் கும் எதிர்கால நடப்புக்கும் பாலம் சமைத்துக் கொடுக் கும் சக்தி இந்த மனத்துக்கு இல்லையென்ருல், அப்பால் வாழ்க்கை வாழ்க்கையாகவா இருக்கும் !...வேண்டாம், வேண்டவே வ்ேண்டாம் பொல்லாத அந்தச் சிந்தனை ! சிலப்பதிகாரத் தம்பதிகளின் நினைவு முகங்கள் மனத்திரையைக் கிழித்துக் கொண்டு தெரிந்தன. அந்த இரு உருவங்களுக்கு மத்தியில் வேறு புதிய இரண்டு