பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 எடுத்த படத்தைச் சட்டைப் ஒபக்குள்ளே திணித் தான் மாமல்லன். வலது கைவிரல்கள் ஷெர்வானி சட்டையின் கழுத்துப் பட்டையை நெருடிக் கொண் டிருந்தன. 'என் படத்தைக் கொடுங்க, ஐயா !” என்று மீண்டும் நினைவுக் குறிப்பை வெளியிட்டான் குலோத்துங்கன். மாமல்லன் எதையும் சட்டை செய்யவில்லை. சட்டை யில் விளையாடிய விரல்கள் சுருள் அலை படிந்த தலை மயிரை மேலும் சுருட்டியவாறு இருந்தன. பறந்து சென்ற பைங்கிளியின் இதயத்துள் கூடு விட்டுக் கூடு பாய்ந்து அவளது தூய்மைக்குத் தீக்குளிச் சோதனை நடத்த முயற்சி செய்து கொண்டிருந்த மாமல் லன், எதிரே எழுந்து நின்ற குலோத்துங்கனின் வேண்டு கோளே காதுகளில் தேக்காமல், தன் போக்கில் மாடிக் கைப்பிடிச் சுவரருகில் வந்து நின்று மண்னே நோக்கி ஞன். மை இருட்டைப் பொட்டாக்கி நிலமடந்தை பேசா மடைந்தையாய்த் திகழ்வதாகப்பட்டது. விண் னைச் சாடியது நுட்பப் பார்வை. அலைந்த கங்குலின் கங்கிலே மேகலை அமர்ந்து குறுஞ் சிசிப்பினே நெட்டித் தள்ளிக் கொண்டிருந்தாள். ‘அள்ளாம கொறையாது ; சொல்லாம பொறக் காது ' தெருவில் நடமாடிச் சென்றவர்கள் பேசிக்கொண்டு போளுர்கள். சந்தைக்கு வந்தவர்கள். விழித்துணைக்கும் ஆட்கள் கிடைத்தனர். வெறும் வாயில் பிடி அவல்ைப் போட்டார்கள். சொற்கள் அவனுடைய பிடரியை விளை யாட்டுப் பலகையாக்கி சொக்கட்டான் ஆடின. ஏறு முகத்திலிருந்த வெய்யில் நெற்றிப் பொட்டைத் தட்டி உடைத்தது. மேகலை, உனக்குக் குலோத்துங்கனை அறி முகம் உண்டா?...பிஞ்சுப் பிராயத்திலேயே அவன் நெஞ்சத்தை நீ அறிந்தவளா?...பின், ஏன் என்னிடம் இவனைப்பற்றி இதுவரை எதுவும் சொல்லவில்லை ?... உன் நெஞ்சத்தை நீ தாழிட்டுக்கொண்டு, நான் உன் வாய்ப்பூட்டை உடைத்தால், உண்மையின் நெஞ்சம்