பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{}{} எனக்கு எவ்வாறு தெரியும் ? ஐயம் ஒரு பேய்; முன்பின் ஆராய்ச்சியின்றி அதை அண்டியவர்களே அது ஆட்டிப் படைத்த கதையை செய்தித் தாள்களிலே, சஞ்சிகை களிலே, திரைகளிலே நான் கண்டவன்தான். ஆற அமரச் சிந்தித்து ஒரு முடிவு செய்யத் தவறமாட் டேன் !...” தன் தோளைப் பிடித்து உலுக்கிய கையை விடுவித்து விட்டு, மாமல்லன் தலையைத் திருப்பியபோது, எக்காள மிட்டுச் சிரித்த வண்ணம் குலோத்துங்கன் தெளிவான முகத்தோடு நிற்பதை அறிந்தான். கார்னிவல் விழா வில் மல்யுத்தப் போட்டியின்போது கோதாவில் இறங் கிய வீரர்களின் பிடி'யின் நினைவு அவன் சிந்தன்ையை கொழு கொம்பாக்கிக் கொண்டது. குலோத்துங்கனே எட்டிப் 'ಸ್ತ್ರೀ ಖಿ தட்டி யெறிந்து பந்தாடி, பாதங்களில் நசுக்திப் பிழிந்திட வேண்டும் போலிருந் தது. தண்டனை கொடுக்க மாமல்லன் யார் ? குலோத் துங்கன் செய்த குற்றந்தான் என்ன ? "ஐயா, அந்தப் படத்தை தயவு செய்து என்னிடம் கொடுத்துவிட மாட்டீர்களா ? அது எள்னிடம் இருந் தால்தான், என் உயிர் உடம்பில் தரிக்கும்!” 'ச்சி !! என்று உறுமினன்; கைகளை ஓங்கினுன் æರ್ಖ ஓங்கிய * தைகள் இறங்குவதற்குள், ಅ !" என்று கூச்சலிட்டு ஓடி வந்தாள் சிந்தா 說為發霰。 செய்வகை அறியாமல் அப்படியே நின்ருன் மாமல்லன். கண் சிமிட்டும் நேரம் மறைந்திருக்கும். உடனே அவன் தன் அறைக்குள் ஒடிச் சென்று கதவு களைத் தாழிட்டு பத்திரமாக மூடிக்கொண்டான். விம்மல் ஒலி மட்டும் புறப்பட்டுக் கொண்டிருந்தது. சோளியின் நிறம் கறுப்பு: நல்ல கறுப்பு. தன்மை, பட்டு. அடையாளம் : சுற்றிலும் வெண் புள்ளிகளை இடைவிட்டு, மையத்தில் வட்ட நிலாச் சித்திரங்கள். பின்னப்பட்டிருந்தன. வான மடந்தையும் மேகலையை