பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#01 ஒப்பத்தான் தோற்றமளித்தாள். மாடிப்படிகளின் வரிசை எண்களில் அவள் கருத்து ஊன்றியிருந்தது ; குங்கு மப்பூ, பனங்கற்கண்டு, ஏலக்காய் ஆகியவற்றின் கூட் டுறவில் காய்ச்சப்பட்ட பசும்பால் வெள்ளிக் குவளையில் தயாராகயிருந்தது. ஆவி பறந்த பாலின் சூடு ஆறி விடாமலிருக்க, சின்னத் தட்டொன்று அதன் வாயை மூடியது. தாம்பூலப் பெட்டியில் அழகாக அடுக்கி வைக் கப்பட்டிருந்த மலேக்கோட்டை வெற்றிலேக் காம்பு ஒன் றைக் கிள்ளி எடுத்து இதழ்களுக்கு நடுவில் வைத்தர்ள். சாறு உறைத்தது. அவள் மாடியில் இருந்தாலும், அவளுக்குச் சொந்தமான உள்ளம் விருடிக்கு விளுடி கீழ்த் தளத்திற்கு ஒடி ஒடித் திரும்பிற்று. என் அத்தர்ன் மேலே வருவாங்க, இல்லியா?...ஏன்...வரமாட்டாங்க? வருவாங்க, கட்டாயம் வருவாங்க ' என இதயத்தின் முனையில் காத்திருந்த ரத்தத் துடிப்பு அவளுக்குத் தேறு தல் தெரிவித்தது. காலைப்பொழுதில் நிகழ்ந்த சலனத் தைப்பற்றி மறந்துவிட வேண்டுமென்றுதான் அவள் பிரயத்தனப்பட்டாள். நினவும் மறதியும் பால்குடி மாருத கைக்குழந்தைகள். வருந்தி அழைத்தால் ஆழும்பு பண்ணி உற்றவர்களை வருந்தச் செய்வதில் அவற்றுக்கு ஒர் ஆனந்தம். நினைத்ததை மறந்தாள் மறந்ததை நினைத்தாள். நீ கீழே போயேன், மேகலை ' என்று பணித்த குரல் மறைந்தது ; அவள் அரை குறையாகக் கண்ட அந்தப் புகைப் படத்தைப் பற்றின எண்ணச் சுடர் நின்று நிதானித்து எரியத் தொடங்கியது. t 'கீழே விழுந்த சின்னப் படத்தை என்ன முந்திக் கொண்டு அத்தான் அவசரமாக எடுத்தாங்களே, என்ன படம் அது '-இந்தக் கேள்வி பல கிளைகளாகப் பிரிந் தது; அத்தான் மனத்தில் விஷவிருட்சம் ஏதாவது முளைத்து விட்டிருக்குமோ என்று அவள் அஞ்சினுள் ; ஏதோ ஓர் இடைவெளி பள்ளம் பறித்துவிட்டதுபோல் உள்ளுணர்வு அறிவுறுத்தியது. எழுதிச் செல்லும் விதியின் கையெழுத்தைப் புரிந்துகொள்ள இயலாமல் அவள் தவியாய்த் தவித்துத் தண்ணீராக உருகினுள். மையிட்ட கண்களுக்கு மணிகள் வரம்பு கட்டின : 7