பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i{}3 கானல் நீராகிவிட்டதா? சிலம்புச் செல்வத்தையும் சிலம் புச் செல்வரையும் மானசீகமாகத் துணைக்கு வைத்துக் கொண்டு காதைகளை கதையாக்கி துணைவன் சொல்லி வந்தபோது, மாதவிக்கும் கோவலனுக்கும் மத்தியில் புயலை விளைவித்த கானல் வரி நிகழ்ச்சி கண்ணகிக்கு நன்மையாக முடிந்து, அவளுக்கு உரியவனே அவ வரிடமே சேர்ப்பித்த வரலாற்றைச் சிந்தனைக்குள் அடைத்தாள். இந்த ஒப்புவமை தோன்றுதற்குரிய காரண காரியத்தை அவள் கணிக்கத் தெரியாமல் திண் டாடிஞள். கானல் வரிச் சம்பவம் போன்று இந்த குலோத்துங்கன் ஆரம்பமாக அமைந்து விடாமல், முடிவு மாத்திரம் கர்னல் வரி உண்டு பண்ணிய நற்பய னைத்தந்து, தன் அத்தான் நிழலில் தங்கும் பாக்கியம் பெற வேண்டுமென்று ஆசைப்பட்டாள் மேகலை, அலாரம் கடியாரம் மேகலையை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. ‘அத்தான் இவ்வளவு நேரமாகியும் ஏன் வர வில்லை ?...?-தனிமையில் வாடி, கூண்டுக் கிளியாக மனம் நொந்து, மெய் குலேந்தாள் பெண்டு. வெண்ணிலவும் வீசுந் தென்றலும் அவளுக்குத் "தாலேலோ பாடத் தொடங்கின ; அதே சமயத்தில், அயல் நாட்டு வாசனைத் திரவியமும் வைர மோதிரமும் பூபாளம் பாடலாயின. - அத்தான், வந்திட்டீங்களா ?” தங்கத் தாலியும் வைர அட்டிகையும் முழுமையாகத் தெரிந்தன. - - .