பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 எனக்குக் கிடைக்காதிருந்தா, நான் எப்பவோ செத்துச் சுண்ணும்பாகி யிருப்பேன்!” என்று வெளியிட்டாள். முந்திய நாளில் துணைவியின் உள்ளத்தைச் சோதனை செய்ய முனைந்தானே -இந்த ஒரு பதில் அவனுக்கு நிறைவு தராதோ ? பதருமல் இருந்து காரியத்தைச் சிதறடிக்காமல் நிறைவேற்றத் திட்டமிட்டிருந்தான் அவன். இதுவரை எதுவுமே நடக்காதது போலத்தான் அவன் நடத்தை காணப்பட்டது. பழைய மாமல்லனின் உடலில் புதிய மாமல்லனின் உள்ளம் புனைந்துதான் அவன் நடந்து கொண்டான் ; பேசினுன் பழகினன். அந்தப் புகைப் படத்தைப்பற்றி மேகலை பேச்செடுத்தபோதுகூட, அது ஒண்ணும் உனக்குச் சம்பந்தமில்லை ! என்று தீர்மான மாகப் பதில் அளித்துவிட்டான் அவன் ! நம்ப வேண்டியவள் நம்பினுள் ; நம்பமாட்டாதவன் நம்பவில்லை. உண்மையும் பொய்யும் இடம் மாற்றப் பட்ட, அல்லது கைமாறிய துருப்புச் சீட்டுக்களாயின. வாழ்க்கைப் பாடலின் பொழிப்புரையும் இதுதானே...? விட்ட குறையைத் தொட்டு முடித்துப் பூரணத்துவம் கொடுத்த பிறகு சித்திரத்தைப் பார்க்கும் ஓவியக்காரன் பூரித்துப் போவான் , மாமல்லனும் அவ்வாறு தான் இருந்தான். எழுதி முடித்த கடிதத்தில் எக்காளச் சிரிப் புடன் மாமல்லன் விழி பதித்தான். பிள்ளையார் சுழி போட்டு, உயிருக்குயிரான தம்பி திருமாறனுக்கு என்று தொடங்கியிருந்த கடிதத்தில் அவன் விரும்பிய சில வாக் கியங்கள் மாத்திரம் மறுமுறையும் அவன் பார்வைக்கு இலக்காயின. “...என்ளுேடு உடன் பிறவாத தங்கை சிந்தாமணி. அவளுடைய எதிர்காலம் செம்மையுடன் இருக்க வழி வகை செய்ய வேண்டியது என் கடமையாகும். அந்தப் பிரச்னையில் நான் மூழ்கியிருக்கையில் உன்னிடமிருந்து தபால் வந்தது. சிந்தாமணி திருமதி மாறனுக ஆன தும்தான் எனக்கு இன்ப மூச்சுவரும் பங்களா வாசமும் பண்புள்ள உனது அன்பும் அவளுக்குப் பருவகால