பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#07 _ பொற் கொலுசுகள் காப்பி, பலகாரம் தந்தன. கொடுத்து வைத்த இதழ்கள் சுவைத்தன. 'அத்தான், அத்தான்...' "என்ன மேகலை ?” & * போட்டோ ஒண்னு காட்டப் போறேன் !" குலோத்துங்கன்-மேகலை இருவரின் அந்த நாளேப் புகைப் படத்தைக் குலோத்துங்கனிடம் கூட நீட்ட ஒப்பா மல், மத்திரமாகத் தன் கைப்பெட்டிக்கடியில் ஒளித்து வைத்திருந்தான். இது என்ன படம் ? இது என்ன புதுக்கூத்து ? நேத்திரங்கள் ஜோடியாக மோடி செய்தன. மோடி' எடுக்கத் தெரிந்த மந்திரவாதி மாமல்லன். அவள் பிணங்கிளுள் அவன் சிணுங்குவானு, என்ன ? பறிக்கப்பட்ட பூவானது படம். பார்வை விளிம்பில் அது கிரித்தட்டு சுற்றியது. அந்தப் புதைப் படத்தில் அவன் இருந்தான்; அத்துடன் குமரி ஒருத்தியும் இருந் தாள். பள்ளி நாட்களிலே நாடக விழாவின்போது எடுக்கப்பட்ட படம். கைவசமிருந்த இந்த நிழற் படமும், மனத்திலிருந்த அந்தப் படமும் மனச்சாட்சியின் முதுகில் அடித்த உதை நெஞ்சில் உறைத்தது. எப்போதோ எடுக்கப்பட்ட இது மேகலையிடம் எப்படி வந்தது ... என்னிடம் காண் பிக்கக் காரணம் என்ன ?......மறைத்து வைத்த இவளு டைய படத்தைப்பற்றி இவள் அறிந்துகொண்டு விட்டா ளென்று அர்த்தம் -என்ன அன்ர்த்தம் இது ரீஎண்ணிக்கொண்டே யிருந்திருப்பான் அவன், அவள் அனுமதிக்கவில்லை. 'என் தோழி மாதவி கொடுத்தாள். வட நாட்டிலேருந்து போன வாரம் வந்தாள். வீட்டுக்குப் போயிருந்தேன். கல்யாண விவரத் தைக் கேட்டாள். பெயரைச் சொன்னதும், இந்தப் படத்தை எடுத்தாந்து காட்டி, இவர்தானே...'ன்னு கேட்டாள். நான் 'ம்' கொட்டினேன்.--மேகலை !