பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

it} முகங்கள் தோன்றின. அவனுக்கு உச்சி குளிர்ந்தது; உள்ளம் குளிர்ந்தது. மேகலையையும் என்னையும் திருமணக் கோலத்தில் கண்டு, எங்களை ஆசீர்வதித்து ஆரத்தி சுற்றப் போகும் அம்மாவின் சந்தோஷத்துக்கு எப்படி அளவு சொல்ல முடியும் !...” என்று எண்ண மிட்ட அவன் குறிச்சியில் வந்தமர்ந்தான் ; பூப்படுக் கையில் குந்தியது போலவே உணரலாஞன். மனம் கொண்டது மாளிகை. 'மாமன் மகளே! மரகதச் சிலேயே மருக்கொழுந்தே' என்று சன்னக் குரலில் பாட்டின் இழைகளைப் பின்னி ஞன் மாமல்லன். சிரிப்பு வந்தது. காட்டுக் கொன்று மேட்டுக் கொன்ருகச் சிதறிக் கிடந்த சிந்தனைச் சித்திரங் கள் அவனை வருந்தி வருந்தி அழைத்தன. கலே பெரிது வயிறு சிறிது. கலையையும் வயிற்றையும் ஒன்று சேர்த்துப் பிணைத்த சிந்தனையாளர்களுடன்தான் அவன் ஓய்வுப் பகுதியின் பெரும் பொழுதைக் கழிப்பது வழக்கம் இயந்திரங்கள் உறவாடும் ஆங்கிலக் கம்பெனி அவனுடைய வயிறு நிறைய வாழ்வு தந்தது ; அது அவனது இயந்திர வாழ்க்கையின் ஒரு பகுதிதான். ஆளுல் அவன் மனம் ஒன்றியது இல்க்கியத்தில்தான். கிழக்கும் மேற்கும் சந்திக்கும்-அல்லது பிரியும் இடத் தில் அவன் அண்டினுன் , ஒண்டிஞன். சங்கீதக் கச் சேரியில், சலனப் படத்தில் காணுத தனித்த இன்ப உணர்வை அவன் இலக்கிய உலக யாத்திரையில் அடைந்தான். விரிந்து கிடந்த புத்தகங்களிலிருந்து விலகிப்பிரிந்து கிடந்தது ஒரு செய்தித்தாள். 'கல்கித் தமிழ் சன்னும், அடைமொழியைத் தமிழுக்கு அளித்து, தன் பெயருக்கு. இலக்கிய உலகத்திலே சிரஞ்சீவித் தன்மை கொடுத்து, விட்டு, அமரராகக் காட்சி யளித்துக்கொண்டிருந்தார் பேராசிரியர். அவனது நேத்திரங்கள் நித்தில்ங்கள் "சொரிந்தன. அவ்வுருவுக்கு அஞ்சலி செய்தது. அவ னுடைய இலக்கிய நெஞ்சம். - ஊதுவத்தியைக் கொளுத்தினன் மாமல்லன் சற் முன் மருக்கொழுந்து என்ற சொல்லடுக்கை எண்ணி