பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 09 சினம் அவளைக் கண்டதும் மறைந்தது; அவளது பருவ எழில் போதை யூட்டியது ; அவன் மயக்கமடைந்தான் ; மயங்கினுன் ! தன் நிலை பெற்றதும், "சரி, உலவிவிட்டு வரலாம், மேகலை !’ என்ருன் அவன். அவள் உடன் தொடர்ந் தாள். பிரயான ஏற்பாடுகள் நடந்தன. அம்பாள் காப்பித் துரள் கம்பெனி, காமராசர் வாசகசாலை, செட்டியார் ப்ாத்திரக்கடை முதலான இடங்களில் விடை’ பெற்றுக் கொண்டான் மாமல்லன். மேகலையும் தனக்குத் தெரிந்தவர்கள் வீடுகளிலும், உரித்தான தோழிகளிடத்திலும் பயணம் சொல்லிக் கொண்டாள். பெற்றவர்களையும் உடன் பிறப்பையும் எப்படிப் பிரிவது என்ற ஆருத் துயரத்தில் இருந்தாள் அவள். மாடியிலிருந்த அள்ளிடம் ஏதோ சொல்ல வந்த மாமல்லனை அழைத்த குலோத்துங்கன் அவனிடம் ஒரு சங்கிலியைக் கொடுத்தான். 'உங்கள் மனைவிக்கு என்னு டைய கல்யாணப் பரிசு ' என்று துலாம்பரமாகப் பேசிஞன். • , வாங்கிக்கங்க, அத்தான்!” என்ற வேண்டுகோளை மாடியிலிருந்த மேகலை உதிர்த்தாள். மாமல்லனின் கைகளில் தங்கச் சங்கிலி ஒளி வீசிக் கொண்டிருந்தது. கணப்பொழுது ஒன்ருேடு நிற்குமா? எக்ஸ்பிரஸ் வந்தது. அரியலூர், மேகலை பெட்டியில் ஏறிக்கொண்டாள். அவளுக்குப் பக்கத்தில் கோசலை அம்மாள். மரகதவல்லி அம்மையும் சோமசுந்தரமும் தரையில் நின்றபடி மகளுக்குப் புத்திமதி சொன்னர்கள் : பெட்டிக்குக் கீழே நின்ருன் மாமல்லன். சிந்தா மணிக்காகவும் குலோத்துங்கனுக்காகவும் அவன் காத்